இலங்கையில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் கண்டி பி-லவ் (B-Love) அணியின் தலைவராக வனிந்து ஹஸரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கண்டியை பிரதிநிதித்துவப்படுத்தி கண்டி பல்கோன்ஸ் அணி விளையாடியிருந்த நிலையில், இந்த ஆண்டு புதிய உரிமையாளர்களின் கீழ் கண்டி பி-லவ் என்ற பெயரில் களமிறங்கவுள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில் பிரகாசித்த குரூஸ்புள்ளே, ரமேஷ் மெண்டிஸ்!
வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டும் கண்டி பல்கோன்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்ததுடன் அணியை இரண்டாவது குவாலிபையர் வரை அழைத்துச்சென்றிருந்தார். இந்தநிலையில் இம்முறையும் கண்டி பி-லவ் அணியின் தலைவராக வனிந்து ஹஸரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி பி-லவ் அணிக்காக அஞ்செலோ மெதிவ்ஸ், வனிந்து ஹஸரங்க, பக்ஹர் ஷமான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ் அல்லது வனிந்து ஹஸரங்க ஆகியோரில் ஒருவர் செயற்படுவர் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது கண்டி பி-லவ் அணியானது தங்களுடைய அணியின் தலைவராக வனிந்து ஹஸரங்கவை நியமித்துள்ளமையை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இம்முறை LPL தொடரானது ஜூலை 30ம் திகதி முதல் ஆகஸ்ட் 20ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மற்றும் கண்டி பல்லேகலை மைதானங்களில் நடைபெறவுள்ளன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<