Home Tamil தனுக, நுவனிந்துவின் அதிரடியால் கோல் அணிக்கு அபார வெற்றி

தனுக, நுவனிந்துவின் அதிரடியால் கோல் அணிக்கு அபார வெற்றி

Lanka Premier League 2022

227

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (12) நடைபெற்ற கண்டி பல்கொன்ஸ் அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில், தனுக தாபரே, நுவனிந்து பெர்னாண்டோவின் அரைச் சதங்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் பங்களிப்புடன் 12 ஓட்டங்களால் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதன்மூலம், இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 2ஆவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளப்பட்டியலில் 3ஆவது இடத்தைப் பிடிக்க, முதல் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி தோல்வியுறாத அணியாக வலம் வந்த கண்டி பல்கொன்ஸ் அணி முதல் தோல்வியைத் சந்தித்தது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, கார்லோஸ் பிராத்வைட் மற்றும் இசுரு உதானவின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 10 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் 5ஆவது விக்கெட்டுக்காக பாரிய இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்பிய தனுக தாபரே – தனுஷ்க நுவனிந்து பெர்னாண்டோ ஜோடி LPL வரலாற்றில் இலங்கை அணிக்காக விளையாடாத இரண்டு வீரர்களால் எந்தவொரு விக்கெட்டுக்காகவும் பெற்றுக் கொண்ட அதிசிறந்த இணைப்பாட்டத்தைப் பதிவு செய்தனர். 87 பந்துகளில் 113 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் நுவனிந்து பெர்னாண்டோவின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது.

இசுரு உதானவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த நுவனிந்து பெர்னாண்டோ LPL தொடரில் தனது கன்னி அரைச் சதத்தைப் பதிவு செய்ததுடன், 3ஆவது T20i அரைச் சதத்தையும் பூர்த்தி செய்து 56 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து தனுக தாபரே அரைச் சதம் கடந்து 70 ஓட்டங்களைப் பெற்று கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு பலம் சேர்த்தார். பின்னர் இந்த 2 வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கண்டி பல்கொன்ஸ் அணியின் பந்துவீச்சில் கார்லோஸ் பிராத்வைட் 3 விக்கெட்டுகளையும், இசுரு உதான 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 154 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணிக்கு பெதும் நிஸ்ஸங்க சிறந்த ஆரம்பத்தினை வழங்கிய போதும், தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

எனினும் மத்திய வரிசையில் களமிறங்கிய அஷேன் பண்டார மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகிய இருவரும் அதிரடியான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை அதிகரித்தனர். குறித்த இருவரும் 7ஆவது விக்கெட்டுக்காக 24 பந்துகளில் 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர். LPL போட்டிகள் வரலாற்றில் 7ஆவது விக்கெட்டுக்காக பதிவு செய்த சிறந்த இணைப்பாட்டமாக இது பதிவாகியது.

எவ்வாறாயினும், சாமிக்க கருணாரத்ன துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற கண்டி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இறுதியில் 12 ஓட்டங்களால் கண்டி பல்கொன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

கண்டி பல்கொன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஷேன் பண்டார 30 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருக்க, சாமிக்க கருணாரத்ன 15 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 32 ஓட்டங்களைப் பெற்றார்.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்டிருந்த லக்ஷான் சண்(த)கன், 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், நுவன் துஷார 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, இமாத் வசீம் ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுக தாபரே பெற்றுக் கொண்டார்.

இப்போட்டியில் வெற்றியீட்டிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, தமது அடுத்த போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியையும், தோல்வியைத் தழுவிய கண்டி பல்கொன்ஸ் அணி, தமது அடுத்த போட்டியில் தம்புள்ள ஓரா அணியையும் சந்திக்கவுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் நாளை (13) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க << 

Result


Kandy Falcons
141/7 (20)

Galle Gladiators
153/6 (20)

Batsmen R B 4s 6s SR
Thanuka Dabare run out (Pathum Nissanka) 70 51 6 2 137.25
Kusal Mendis c Pathum Nissanka b Carlos Brathwaite 1 4 0 0 25.00
Lahiru Udara b Isuru Udana 5 6 1 0 83.33
Azam Khan lbw b Carlos Brathwaite 1 3 0 0 33.33
Iftikhar Ahmed c Pathum Nissanka b Carlos Brathwaite 0 1 0 0 0.00
Nuwanidu Fernando lbw b Isuru Udana 56 50 5 0 112.00
Imad Wasim not out 15 5 2 1 300.00


Extras 5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 153/6 (20 Overs, RR: 7.65)
Bowling O M R W Econ
Isuru Udana 4 0 19 2 4.75
Carlos Brathwaite 4 1 17 3 4.25
Ashan Priyanjan 1 0 17 0 17.00
Wanidu Hasaranga 4 0 23 0 5.75
Zahoor Khan 3 0 42 0 14.00
Chamika Karunaratne 4 0 33 0 8.25


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c & b Lakshan Sandakan 29 32 3 0 90.62
Andre Fletcher c Azam Khan b Nuwan Thushara 8 9 1 0 88.89
Kamindu Mendis c Nuwan Pradeep b Lakshan Sandakan 9 14 1 0 64.29
Wanidu Hasaranga c & b Imad Wasim 6 7 1 0 85.71
Ashan Priyanjan run out (Thanuka Dabare) 1 1 0 0 100.00
Ashen Bandara not out 41 30 3 1 136.67
Carlos Brathwaite c Kusal Mendis b 4 9 0 0 44.44
Chamika Karunaratne run out () 32 15 5 0 213.33
Isuru Udana not out 3 3 0 0 100.00


Extras 8 (b 4 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 141/7 (20 Overs, RR: 7.05)
Bowling O M R W Econ
Imad Wasim 4 0 15 1 3.75
Nuwan Thushara 4 0 26 2 6.50
Wahab Riaz 4 0 34 0 8.50
Nuwan Pradeep 3 0 34 0 11.33
Lakshan Sandakan 4 0 22 2 5.50
Iftikhar Ahmed 1 0 6 0 6.00