கண்டி பல்கொன்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகள் இடையே நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் 18ஆவது போட்டியில் கண்டி பல்கொன்ஸ் 39 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியுடன் கண்டி பல்கொன்ஸ் அணி தொடரில் 7ஆவது வெற்றியுடன் தமது வெற்றி ஓட்டத்தை தொடர, தம்புள்ளை ஓரா அணிக்கு இது தொடரில் 6ஆவது தோல்வியாக மாறுகின்றது.
நேற்று (18) கொழும்பில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி பல்கொன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
>> இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணியினர் சிறந்த ஆரம்பத்தை பெறாத போயினும் மத்திய வரிசையில் பிரகாசித்த அஷேன் பண்டாரவின் ஆட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தனர்.
கண்டி பல்கொன்ஸ் அணி துடுப்பாட்டம் சார்பாக அதிகபட்சமாக அஷேன் பண்டார 31 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பெளண்டரி அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் தம்புள்ளை ஓரா அணி பந்துவீச்சில் கலன பெரேரா, திலும் சுதீர மற்றும் மெதிவ் போர்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 161 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ள ஓரா அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாறிய போதும் சிக்கந்தர் ரஷா தனது பொறுப்பான ஆட்டம் மூலமாக நம்பிக்கை கொடுத்திருந்தார்.
எனினும் சிக்கந்தர் ரஷா தனது விக்கெட்டினை போட்டியின் 13ஆவது ஓவரில் பறிகொடுக்க தம்புள்ள ஓரா அணி மீண்டும் தடுமாறத் தொடங்கியது.
இறுதியில் தடுமாற்றத்தில் இருந்து மீளாத தம்புள்ள ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களுடன், போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
>> சாதனையுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்த தம்புள்ள ஓரா
தம்புள்ள ஓரா அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராடிய சிக்கந்தர் ரஷா 2 சிக்ஸர்கள் 3 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் பெற்றார்.
மறுமுனையில் கண்டி பல்கொன்ஸ் அணி பந்துவீச்சில் ஒசானே தோமஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, பேபியன் அலன் மற்றும் சமிந்து விஜேசிங்க ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி பல்கொன்ஸ் அணி வீரரான ஒசானே தோமஸ் தெரிவாகியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kavin Bandara | c Shevon Daniel b Kalana Perera | 27 | 16 | 3 | 0 | 168.75 |
Minod Bhanuka | c Dilum Sudeera b Kalana Perera | 14 | 11 | 0 | 1 | 127.27 |
Kamindu Mendis | b Sikandar Raza | 19 | 14 | 3 | 0 | 135.71 |
Ashen Bandara | c Jordan Cox b Dilum Sudeera | 37 | 31 | 1 | 1 | 119.35 |
Najibullah Zadran | c Pramod Madushan b | 22 | 18 | 1 | 0 | 122.22 |
Wanidu Hasaranga | b Dilum Sudeera | 11 | 9 | 1 | 0 | 122.22 |
Fabian Allen | c Jordan Cox b Matthew Forde | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Chamika Karunaratne | not out | 13 | 9 | 0 | 1 | 144.44 |
Chamindu Wijesinghe | not out | 6 | 7 | 0 | 0 | 85.71 |
Extras | 8 (b 4 , lb 2 , nb 0, w 2, pen 0) |
Total | 160/7 (20 Overs, RR: 8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dasun Shanaka | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Sikandar Raza | 4 | 0 | 26 | 1 | 6.50 | |
Pramod Madushan | 3 | 0 | 34 | 0 | 11.33 | |
Kalana Perera | 3 | 0 | 27 | 2 | 9.00 | |
Noor Ahmad | 4 | 0 | 24 | 0 | 6.00 | |
Dilum Sudeera | 2 | 0 | 19 | 2 | 9.50 | |
Matthew Forde | 3 | 0 | 16 | 2 | 5.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jordan Cox | c Ashen Bandara b Zahoor Khan | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Shevon Daniel | c Minod Bhanuka b Oshane Thomas | 8 | 10 | 1 | 0 | 80.00 |
Sikandar Raza | st Minod Bhanuka b Fabian Allen | 45 | 33 | 3 | 2 | 136.36 |
Bhanuka Rajapaksha | c Minod Bhanuka b Oshane Thomas | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dasun Shanaka | c Kamindu Mendis b Oshane Thomas | 14 | 11 | 2 | 0 | 127.27 |
Ravindu Fernando | b Wanidu Hasaranga | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Matthew Forde | b Fabian Allen | 9 | 12 | 0 | 0 | 75.00 |
Noor Ahmad | c Wanidu Hasaranga b Chamindu Wijesinghe | 13 | 11 | 0 | 1 | 118.18 |
Dilum Sudeera | not out | 21 | 26 | 1 | 0 | 80.77 |
Kalana Perera | c Minod Bhanuka b Chamindu Wijesinghe | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Pramod Madushan | not out | 9 | 10 | 0 | 0 | 90.00 |
Extras | 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0) |
Total | 121/9 (20 Overs, RR: 6.05) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Zahoor Khan | 3 | 0 | 16 | 1 | 5.33 | |
Chamika Karunaratne | 2 | 0 | 14 | 0 | 7.00 | |
Oshane Thomas | 4 | 0 | 15 | 3 | 3.75 | |
Wanidu Hasaranga | 3 | 0 | 18 | 1 | 6.00 | |
Fabian Allen | 4 | 0 | 23 | 2 | 5.75 | |
Ashen Bandara | 2 | 0 | 18 | 0 | 9.00 | |
Chamindu Wijesinghe | 2 | 0 | 17 | 2 | 8.50 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<