Home Tamil வனிந்துவின் அதிரடி வீண்; கொழும்பு ஸ்டார்ஸ் இறுதிப் போட்டியில்

வனிந்துவின் அதிரடி வீண்; கொழும்பு ஸ்டார்ஸ் இறுதிப் போட்டியில்

328

கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி பல்கொன்ல் அணிகள் இடையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் “கொலிபையர் – 2” போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளதோடு தொடரின் இறுதிப் போட்டிக்கும் முதல் தடவையாக தெரிவாகுகின்றது.

நொக்-அவுட் சுற்றில் இருந்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெளியேற்றம்

தீர்மானம் கொண்ட LPL T20 தொடரின் “கொலிபையர் 2” போட்டி “கொலிபையர் 1” போட்டியில் தோல்வியினைத் தழுவிய கண்டி பல்கொன்ஸ் அணிக்கும், “எலிமினேட்டர்” போட்டியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கும் இடையில் நேற்று (22) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெற்றிருந்தது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கண்டி பல்கொன்ஸ் அணிக்கு வழங்கியது.

இதன்படி போட்டியில் முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கண்டி பல்கொன்ஸ் அணி மோசமான ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது. அணியின் ஆரம்ப வீரர்களாக வந்த பெதும் நிஸ்ஸங்க 2 ஓட்டங்களுடனும், அன்ட்ரூ பிளச்சர் ஓட்டம் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

எனினும் மூன்றாம் இலக்கத்தில் ஆடிய கமிந்து மெண்டிஸ், அஷேன் பண்டார ஆகியோர் கைகொடுக்க கண்டி பல்கொன்ஸ் அணி சரிவில் இருந்து மீளத் தொடங்கியது. இதில் கமிந்து மெண்டிஸ் ஒரு சிக்ஸர் ஒரு பெளண்டரி அடங்கலாக 23 ஓட்டங்கள் எடுக்க, அஷேன் பண்டார 2 பெளண்டரிகள் உடன் 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

பின்னர் கண்டி பல்கொன்ஸ் அணிக்கு அதன் தலைவர் வனிந்து ஹஸரங்க தனது அதிரடி மூலம் கைகொடுக்க அவ்வணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்தது.

கண்டி பல்கொன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் வனிந்து ஹஸரங்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததோடு 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் உடன் 77 ஓட்டங்கள் பெற்றார்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித வெறும் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி சரித் அசலன்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் ஆட்டத்தோடு வெற்றி இலக்கினை 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களுடன் அடைந்தது.

மேற்கிந்திய தீவுகளின் இடைக்கால பயிற்சியாளராக கோலி

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பூர்த்தி செய்த சரித் அசலன்க 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் தினேஷ் சந்திமால் 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, ரவி பொப்பரா ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 29 ஓட்டங்கள் பெற்றும், அஞ்செலோ மெதிவ்ஸ் 13 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் அடங்கலாக 21 ஓட்டங்கள் பெற்றும் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

கண்டி பல்கொன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் கமிந்து மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் கசுன் ராஜித தெரிவாகினார். இன்று (23) லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையே நடைபெறுகின்றது.

ஸ்கோர் விபரம்

Result


Kandy Falcons
168/6 (20)

Colombo Stars
169/4 (18.5)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Kasun Rajitha 2 3 0 0 66.67
Andre Fletcher lbw b Kasun Rajitha 0 1 0 0 0.00
Kamindu Mendis b Mohammad Nabi 23 29 1 1 79.31
Ashen Bandara c & b 40 42 2 0 95.24
Wanidu Hasaranga not out 77 34 8 3 226.47
Fabian Allen b Kasun Rajitha 0 1 0 0 0.00
Chamika Karunaratne c Angelo Mathews b Dominic Drakes 6 5 0 0 120.00
Carlos Brathwaite not out 15 5 1 1 300.00


Extras 5 (b 0 , lb 3 , nb 0, w 2, pen 0)
Total 168/6 (20 Overs, RR: 8.4)
Bowling O M R W Econ
Kasun Rajitha 4 0 20 4 5.00
Suranga Lakmal 4 0 27 0 6.75
Dominic Drakes 4 0 32 1 8.00
Mohammad Nabi 4 0 33 1 8.25
Seekkuge Prasanna 1 0 13 0 13.00
Benny Howell 3 0 40 0 13.33


Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Pathum Nissanka b Carlos Brathwaite 11 8 1 0 137.50
Dinesh Chandimal b Kamindu Mendis 38 33 3 1 115.15
Charith Asalanka run out (Andre Fletcher) 64 40 7 3 160.00
Ravi Bopara not out 29 16 3 1 181.25
Dominic Drakes c Fabian Allen b Kamindu Mendis 2 4 0 0 50.00
Angelo Mathews not out 21 13 0 2 161.54


Extras 4 (b 1 , lb 0 , nb 1, w 2, pen 0)
Total 169/4 (18.5 Overs, RR: 8.97)
Bowling O M R W Econ
Isuru Udana 2 0 11 0 5.50
Carlos Brathwaite 3 0 31 1 10.33
Chamika Karunaratne 1 0 4 0 4.00
Wanidu Hasaranga 4 0 39 0 9.75
Oshane Thomas 1 0 19 0 19.00
Fabian Allen 3.5 0 38 0 10.86
Kamindu Mendis 4 0 26 2 6.50




[/vc_column_text]