லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை கண்டி பல்கொன்ஸ் 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.
>> சாதனையுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்த தம்புள்ள ஓரா
மேலும் இந்த வெற்றி கண்டி பல்கொன்ஸ் அணிக்கு தொடரில் 6ஆவது வெற்றியாக மாற, கொழும்பு ஸ்டார்ஸ் அணி மூன்றாவது தோல்வியை பதிவு செய்கின்றது.
இரு அணிகளும் மோதிய இந்தப் போட்டி நேற்று (17) கொழும்பில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 106 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ் 38 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை எடுத்தார்.
மறுமுனையில் சிறப்பான முறையில் பந்துவீசியிருந்த சாமிக்க கருணாரட்ன வெறும் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஒசானே தோமஸ் 3 விக்கெட்டுக்களையும் இசுரு உதான 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 16 ஓவர்களில் ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களுடன் அடைந்தது.
கண்டி பல்கொன்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் அரைச்சதம் பெற்றதோடு 48 பந்துகளில் 5 பெளண்டரிகள் உடன் 51 ஓட்டங்களை எடுத்தார். அதேநேரம் அன்ட்ரே பிளச்சர் 41 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> T20 போட்டியில் 15 ஓட்டங்கள் ; வரலாற்றில் மிக மோசமான சாதனை!
மறுமுனையில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டினை கைப்பற்றிய போதும் அது வீணாகியிருந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக சிறந்த முறையில் பந்துவீசியிருந்த சாமிக்க கருணாரட்ன தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | b Isuru Udana | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Dinesh Chandimal | c Najibullah Zadran b Chamika Karunaratne | 20 | 17 | 1 | 1 | 117.65 |
Charith Asalanka | c Kamindu Mendis b Fabian Allen | 12 | 11 | 2 | 0 | 109.09 |
Nawod Paranavithana | c Najibullah Zadran b Chamika Karunaratne | 4 | 4 | 1 | 0 | 100.00 |
Ravi Bopara | c Minod Bhanuka b Oshane Thomas | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Angelo Mathews | c Wanidu Hasaranga b Chamika Karunaratne | 41 | 38 | 4 | 1 | 107.89 |
Benny Howell | c Chamindu Wijesinghe b Oshane Thomas | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Karim Janat | c Andre Fletcher b Oshane Thomas | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Suranga Lakmal | c Minod Bhanuka b Isuru Udana | 15 | 29 | 1 | 0 | 51.72 |
Jeffrey Vandersay | b Chamika Karunaratne | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Kasun Rajitha | not out | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Extras | 9 (b 0 , lb 6 , nb 0, w 3, pen 0) |
Total | 106/10 (19.1 Overs, RR: 5.53) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Isuru Udana | 4 | 0 | 37 | 2 | 9.25 | |
Chamika Karunaratne | 3.1 | 0 | 11 | 4 | 3.55 | |
Oshane Thomas | 4 | 0 | 20 | 3 | 5.00 | |
Fabian Allen | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Wanidu Hasaranga | 4 | 0 | 12 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c Kasun Rajitha b Suranga Lakmal | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Andre Fletcher | not out | 44 | 41 | 4 | 2 | 107.32 |
Kamindu Mendis | not out | 51 | 48 | 5 | 0 | 106.25 |
Extras | 7 (b 0 , lb 5 , nb 0, w 2, pen 0) |
Total | 108/1 (16 Overs, RR: 6.75) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 3 | 0 | 19 | 0 | 6.33 | |
Suranga Lakmal | 2 | 0 | 19 | 1 | 9.50 | |
Jeffrey Vandersay | 4 | 0 | 22 | 0 | 5.50 | |
Benny Howell | 3 | 0 | 16 | 0 | 5.33 | |
Nawod Paranavithana | 1 | 0 | 7 | 0 | 7.00 | |
Karim Janat | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Ravi Bopara | 1 | 0 | 7 | 0 | 7.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<