லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று (18) நடைபெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த கண்டி ஜப்னா கிங்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்க, கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இம்முறை போட்டிகளில் தமது 5ஆவது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து பிளே-ஆப் வாய்ப்பை மேலும் கேள்விக்குறியாக்கிக் கொண்டது
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி, முன்வரிசை வீரர்களின் துடுப்பாட்டத்தின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
உடற்தகுதி பிரச்சினை காரணமாக LPL தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர் டொம் கொஹ்லர் கட்மோருக்குப் பதிலாக ஜப்னா கிங்ஸ் அணியில் இணைந்து பங்களாதேஷ் அணி வீரர் அபீப் ஹொசைன், தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கி அரைச் சதம் அடித்தார். 35 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகளுடன் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இம்முறை போட்டித் தொடரில் தனது முதல் அரைச் சதத்தைப் பதிவு செய்தார். இவருக்கு அடுத்தப்படியாக சதீர சமரவிக்ரம 32 ஓட்டங்களையும், திசர பெரேரா 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளையும், நுவன் துஷார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
- ஜப்னா கிங்ஸ் அணியில் இணையும் பங்களாதேஷ் வீரர்
- மோசமான துடுப்பாட்டத்தினால் கொழும்பு ஸ்டார்ஸ் தோல்வி
- சாதனையுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்த தம்புள்ள ஓரா
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு அணித்தலைவர் குசல் மெண்டிஸைத் தவிர எந்தவொரு வீரரும் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு கைகொடுக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 16 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
கோல் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் மாத்திரம் போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகளுடன் 58 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்;தார். இம்முறை போட்டித் தொடரில் தனது 2ஆவது அரைச் சதத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஜப்னா கிங்;ஸ் அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் புல்லர் மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இதில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக தனது 6ஆவது போட்டியில் களமிறங்கிய யாழ். வீரர் வியாஸ்காந்த், இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் 5ஆவது இடத்தைப் பிடித்தார்.
இதேவேளை, இப்போட்டியில் வெற்றியீட்டிய ஜப்னா கிங்ஸ் அணி, தமது கடைசி லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியையும், தோல்வியைத் தழுவிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, தமது கடைசி லீக் போட்டியில் தம்புள்ள ஓரா அணியையும் சந்திக்கவுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் இன்று (19) நடைபெறவுள்ளது.
அத்துடன் கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்கு இன்று நடைபெறவுள்ள போட்டிகள் வாழ்வா? சாவா? போட்டியாக இரு அணிகளுக்கும் அமையவுள்ளது. இதில் வெற்றியீட்டும் அணி பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | c Imad Wasim b Nuwan Thushara | 23 | 19 | 3 | 1 | 121.05 |
Avishka Fernando | c Iftikhar Ahmed b Nuwan Pradeep | 18 | 15 | 2 | 1 | 120.00 |
Afif Hossain | c Iftikhar Ahmed b Nuwan Thushara | 54 | 35 | 5 | 1 | 154.29 |
Sadeera Samarawickrama | c Thanuka Dabare b Wahab Riaz | 32 | 28 | 2 | 0 | 114.29 |
Shoaib Malik | hit-wicket b Wahab Riaz | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Thisara Perera | c Nuwanidu Fernando b Wahab Riaz | 26 | 13 | 4 | 0 | 200.00 |
James Fuller | run out (Kusal Mendis) | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Dunith wellalage | run out (Nuwan Pradeep) | 5 | 2 | 1 | 0 | 250.00 |
Mahesh Theekshana | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Vijayakanth Viyaskanth | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 8 (b 0 , lb 1 , nb 1, w 6, pen 0) |
Total | 170/8 (20 Overs, RR: 8.5) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Imad Wasim | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Nuwan Thushara | 4 | 0 | 31 | 2 | 7.75 | |
Wahab Riaz | 4 | 0 | 37 | 3 | 9.25 | |
Nuwan Pradeep | 3 | 0 | 32 | 1 | 10.67 | |
Iftikhar Ahmed | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
Lakshan Sandakan | 3 | 0 | 29 | 0 | 9.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Thanuka Dabare | c Thisara Perera b Binura Fernando | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Kusal Mendis | c Shoaib Malik b James Fuller | 58 | 45 | 7 | 1 | 128.89 |
Lahiru Udara | c Sadeera Samarawickrama b Binura Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Asad Shafiq | c Vijayakanth Viyaskanth b Mahesh Theekshana | 10 | 9 | 2 | 0 | 111.11 |
Nuwanidu Fernando | st Sadeera Samarawickrama b Vijayakanth Viyaskanth | 22 | 11 | 1 | 1 | 200.00 |
Iftikhar Ahmed | c & b Vijayakanth Viyaskanth | 23 | 19 | 0 | 2 | 121.05 |
Imad Wasim | c Sadeera Samarawickrama b James Fuller | 14 | 10 | 1 | 1 | 140.00 |
Wahab Riaz | run out (Sadeera Samarawickrama) | 13 | 15 | 1 | 0 | 86.67 |
Nuwan Pradeep | b Binura Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Lakshan Sandakan | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Nuwan Thushara | not out | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Extras | 9 (b 0 , lb 2 , nb 0, w 7, pen 0) |
Total | 154/9 (20 Overs, RR: 7.7) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Thisara Perera | 2 | 0 | 15 | 0 | 7.50 | |
Binura Fernando | 4 | 0 | 20 | 3 | 5.00 | |
Mahesh Theekshana | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
James Fuller | 4 | 0 | 57 | 2 | 14.25 | |
Vijayakanth Viyaskanth | 4 | 0 | 27 | 2 | 6.75 | |
Dunith wellalage | 2 | 0 | 15 | 0 | 7.50 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<