Home Tamil பிளச்சரின் சதத்துடன் கண்டி பல்கொன்ஸ் அபார வெற்றி

பிளச்சரின் சதத்துடன் கண்டி பல்கொன்ஸ் அபார வெற்றி

451

2022ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் இரண்டாவது போட்டியில், கண்டி பல்கொன்ஸ் அணி கொழும்பு ஸ்டார்ஸ் அணி வீரர்களை 109 ஓட்டங்களால் வீழ்த்தி இருப்பதோடு புதிய பருவத்திற்கான தொடரினை வெற்றிகரமாக ஆரம்பம் செய்துள்ளது.

வியாஸ்காந்த், பினுரவின் அசத்தலுடன் ஜப்னாவுக்கு முதல் வெற்றி

இரு அணிகளுக்கும் தொடரில் முதல் போட்டியாக அமைந்த இந்த மோதல் முன்னதாக ஹம்பந்தோட்டை அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலி்ல் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கண்டி பல்கொன்ஸ் வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணிக்கு அதன் ஆரம்ப வீரர்களான பெதும் நிஸ்ஸங்க மற்றும் அன்ட்ரே பிளச்சர் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கியதோடு முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 156 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

கண்டி பல்கொன்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க அரைச்சதம் விளாசி இருந்ததோடு வெறும் 41 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 71 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதேநேரம் களத்தில் இருந்த அன்ட்ரே பிளச்சர் சதம் விளாச கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தது.

சர்வதேசத்தில் இந்த ஆண்டு பிரகாசித்த இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்!

கண்டி பல்கொன்ஸ் அணி துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த அன்ட்ரே பிளச்சர் T20 போட்டிகளில் தன்னுடைய 03ஆவது சதத்துடன் 67 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுமுனையில் கொழும்பு ஸ்டார்ஸ் பந்துவீச்சு சார்பில் எதிரணியில் பறிபோயிருந்த பெதும் நிஸ்ஸங்கவின் ஒரே விக்கெட்டினை சீக்குகே பிரசன்ன கைப்பற்றி இருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி தொடக்கம் முதலே தடுமாறியதோடு வெறும் 14.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 90 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அதிகபட்சமாக அதன் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 23 பந்துகளுக்கு 26 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதேநேரம் கண்டி பல்கொன்ஸ் அணி பந்துவீச்சில் அதன் தலைவரா வனிந்து ஹஸரங்க 4 விக்கெட்டுக்களை கைப்ற்றியதோடு, பேபியன் அலன் 2 விக்கெட்டுக்களை சுருட்டி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை கண்டி பல்கொன்ஸ் அணி சார்பில் சதம் விளாசிய அன்ட்ரே பிளச்சர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Colombo Stars
90/10 (14.3)

Kandy Falcons
199/1 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Niroshan Dickwella b Seekkuge Prasanna 71 41 8 2 173.17
Andre Fletcher not out 102 67 11 3 152.24
Carlos Brathwaite not out 20 13 2 0 153.85


Extras 6 (b 0 , lb 3 , nb 1, w 2, pen 0)
Total 199/1 (20 Overs, RR: 9.95)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 18 0 9.00
Suranga Lakmal 4 0 29 0 7.25
Dominic Drakes 4 0 33 0 8.25
Keemo Paul 2 0 26 0 13.00
Benny Howell 3 0 34 0 11.33
Muditha Lakshan 2 0 33 0 16.50
Seekkuge Prasanna 3 0 23 1 7.67


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella run out (Wanidu Hasaranga) 5 4 1 0 125.00
Angelo Mathews c Fabian Allen b Wanidu Hasaranga 26 23 2 0 113.04
Charith Asalanka c Andre Fletcher b Carlos Brathwaite 1 2 0 0 50.00
Ravi Bopara c Wanidu Hasaranga b Zahoor Khan 2 6 0 0 33.33
Dinesh Chandimal b Wanidu Hasaranga 9 9 1 0 100.00
Benny Howell lbw b Wanidu Hasaranga 0 1 0 0 0.00
Seekkuge Prasanna lbw b Wanidu Hasaranga 0 1 0 0 0.00
Dominic Drakes c Pathum Nissanka b Fabian Allen 18 22 2 0 81.82
Keemo Paul b Ashian Daniel 22 15 1 2 146.67
Muditha Lakshan not out 6 3 1 0 200.00
Suranga Lakmal lbw b Fabian Allen 0 1 0 0 0.00


Extras 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 90/10 (14.3 Overs, RR: 6.21)
Bowling O M R W Econ
Zahoor Khan 2 0 8 1 4.00
Carlos Brathwaite 3 0 21 1 7.00
Isuru Udana 2 0 11 0 5.50
Wanidu Hasaranga 3 0 14 4 4.67
Chamika Karunaratne 2 0 12 0 6.00
Ashian Daniel 2 0 22 1 11.00
Fabian Allen 0.3 0 1 2 3.33



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<