லங்கா பிரீமியர் லீக்கில் இன்று பிற்பகல் (19) நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சொஹைப் மலிக், திசர பெரேரா ஆகியோரது அபார பந்துவீச்சு மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன.
இதன்மூலம் இம்முறை போட்டித் தொடரில் 6ஆவது வெற்றியைப் பதிவு செய்த நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மறுபுறத்தில் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தைப் பிடித்து பிளே-ஓப் சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே தக்கவைத்துக் கொண்ட கொழும்பு ஸ்டார்ஸ் அணி 5ஆவது தோல்வியைத் தழுவி 6 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தினேஷ் சந்திமால் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய இருவரும் டக்அவுட் ஆகி வெளியேறினர். தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாற கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக டொமினிக் ட்ராக்ஸ் 28 பந்துகளில் 38 ஓட்டங்ககளையும், நிஷான் மதுஷ்க 44 பந்துகளில் 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
மறுமுனையில் சிறப்பான முறையில் பந்துவீசியிருந்த சொஹைப் மலிக் வெறும் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அணித்தலைவர் திசர பெரேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 129 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 15.5 ஓவர்களில் ஓவர்களில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களுடன் அடைந்தது.
கண்டி பல்கொன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களாக் களமிறங்கி சத இணைப்பாட்டத்துடன் சாதனை புரிந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளுடன் 69 ஓட்டங்களை எடுத்தார். இம்முறை LPL தொடரில் அவரது 2ஆவது அரைச் சதம் இதுவாகும்.
அதேநேரம், அவிஷ்க பெர்னாண்டோ 38 பந்துகளுக்கு 3 பௌண்டரிகளுடன் 40 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமின்றி, இவ்விரண்டு வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர். இதன்மூலம் LPL வரலாற்றில் 3ஆவது தடவையாக இந்த ஜோடி சத இணைப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனார்.
அத்துடன், LPL வரலாற்றில் 6 தடவைகள் சத இணைப்பாட்டத்தை புரிந்த ஒரேயொரு வீரராக அவிஷ்க பெர்னாண்டோ இடம்பிடித்ததுடன், இம்முறை போட்டித் தொடரில் 265 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் இடம்பிடித்தார்.
மறுமுனையில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக டொமினிக் ட்ராக்ஸ் மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் அசத்திய ஜப்னா கிங்ஸ் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதன்படி, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரெண்டு இடங்களைப் பிடித்த கண்டி பல்கொன்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணி, 21ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது குவாலிபையர் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dinesh Chandimal | b Thisara Perera | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Niroshan Dickwella | b Shoaib Malik | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Charith Asalanka | c Afif Hossain b Thisara Perera | 6 | 6 | 0 | 1 | 100.00 |
Nishan Madushka | c Thisara Perera b Zaman Khan | 35 | 44 | 0 | 1 | 79.55 |
Dhananjaya Lakshan | c Afif Hossain b Shoaib Malik | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Ravi Bopara | lbw b Praveen Jayawickrama | 20 | 19 | 2 | 0 | 105.26 |
Mohammad Nabi | run out (Praveen Jayawickrama) | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Dominic Drakes | c Dunith wellalage b Suminda Lakshan | 38 | 20 | 4 | 2 | 190.00 |
Benny Howell | not out | 11 | 9 | 0 | 0 | 122.22 |
Jeffrey Vandersay | c Shoaib Malik b Asitha Fernando | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Kasun Rajitha | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 12 (b 4 , lb 1 , nb 0, w 7, pen 0) |
Total | 128/9 (20 Overs, RR: 6.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Thisara Perera | 3 | 0 | 14 | 2 | 4.67 | |
Shoaib Malik | 2 | 0 | 4 | 2 | 2.00 | |
Zaman Khan | 4 | 0 | 22 | 1 | 5.50 | |
Asitha Fernando | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Praveen Jayawickrama | 3 | 0 | 23 | 1 | 7.67 | |
Suminda Lakshan | 4 | 0 | 29 | 1 | 7.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | lbw b Jeffrey Vandersay | 69 | 40 | 8 | 4 | 172.50 |
Avishka Fernando | not out | 40 | 38 | 3 | 0 | 105.26 |
Shoaib Malik | c Kasun Rajitha b Dominic Drakes | 4 | 7 | 0 | 0 | 57.14 |
Sadeera Samarawickrama | not out | 9 | 10 | 1 | 0 | 90.00 |
Extras | 9 (b 0 , lb 1 , nb 0, w 8, pen 0) |
Total | 131/2 (15.5 Overs, RR: 8.27) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 2 | 0 | 18 | 0 | 9.00 | |
Dhananjaya Lakshan | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Dominic Drakes | 2.5 | 0 | 30 | 1 | 12.00 | |
Mohammad Nabi | 2 | 0 | 8 | 0 | 4.00 | |
Jeffrey Vandersay | 4 | 0 | 33 | 1 | 8.25 | |
Benny Howell | 2 | 0 | 16 | 0 | 8.00 | |
Ravi Bopara | 2 | 0 | 16 | 0 | 8.00 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<