Home Tamil கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி

கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி

208
Colombo Stars vs Galle Gladiators

கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும், லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் 12ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> கமிந்துவின் அபார துடுப்பாட்டத்துடன் தம்புள்ளயை வீழ்த்திய கண்டி

மேலும் இந்த வெற்றி கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு தொடரில் கிடைத்த இரண்டாவது வெற்றியாக அமைய, இது கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்கு மூன்றாவது தோல்வியாக மாறுகின்றது.

இரு அணிகளும் மோதியிருந்த இந்த லீக் போட்டி மோதல் நேற்று (13) கண்டியில் ஆரம்பித்திருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி மூலம் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்டிருந்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி குசல் மெண்டிஸ், அசத் சபீக் ஆகியோரின் அபார அரைச்சதங்களோடு 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்கள் பெற்றது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் அசாத் சபீக் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 33 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 194 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு தினேஷ் சந்திமால், சரித் அசலன்க ஆகியோர் சிறந்த துவக்கத்தை வழங்கியிருந்தனர்.

இரண்டு வீரர்களும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 92 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு, கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த தினேஷ் சந்திமால் அரைச்சதம் விளாசி 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பெளண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை எடுத்தார்.

இதேவேளை சரித் அசலன்க அரைச்சதம் நெருங்கிய நிலையில் அவரின் விக்கெட்டும் பறிபோனது. அன்வர் அலியின் பந்துவீச்சில் தனது விக்கெட்டினை பறிகொடுத்த சரித் அசலன்க 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

சரித் அசலன்கவின் விக்கெட்டினை அடுத்து தடுமாறத் தொடங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கியது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் ஆடத் தொடங்கிய ரவி பொப்பரா தனது அதிரடி ஆட்டத்தோடு கொழும்பு ஸ்டார்ஸ் அணியை போட்டியின் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

>> IPL ஏலத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் விபரம் வெளியானது!

அதன்படி கொழும்பு ஸ்டார்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களுடன் அடைந்தது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றியினை உறுதிப்படுத்திய ரவி பொப்பரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெறும் 12 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் நுவான் துஷார மற்றும் அன்வர் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்த போதும் அவர்களின் பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக ரவி பொப்பரா தெரிவாகியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Galle Gladiators
193/5 (20)

Colombo Stars
197/8 (20)

Batsmen R B 4s 6s SR
Thanuka Dabare c Charith Asalanka b Seekkuge Prasanna 33 22 4 1 150.00
Kusal Mendis b Naveen Ul Haq 72 49 5 4 146.94
Lahiru Udara c Niroshan Dickwella b Kasun Rajitha 24 14 2 1 171.43
Asad Shafiq c Benny Howell b Naveen Ul Haq 58 33 7 1 175.76
Anwar Ali run out (Naveen Ul Haq) 1 2 0 0 50.00
Imad Wasim not out 0 1 0 0 0.00


Extras 5 (b 1 , lb 1 , nb 1, w 2, pen 0)
Total 193/5 (20 Overs, RR: 9.65)
Bowling O M R W Econ
Kasun Rajitha 4 0 32 1 8.00
Naveen Ul Haq 4 0 33 2 8.25
Dominic Drakes 3 0 40 0 13.33
Benny Howell 3 0 33 0 11.00
Seekkuge Prasanna 3 0 22 1 7.33
Muditha Lakshan 2 0 20 0 10.00
Ravi Bopara 1 0 11 0 11.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella b Nuwan Thushara 2 6 0 0 33.33
Dinesh Chandimal c Lakshan Sandakan b Wahab Riaz 63 33 6 3 190.91
Charith Asalanka c Asad Shafiq b Anwar Ali 46 38 3 2 121.05
Angelo Mathews c Anwar Ali b Nuwan Thushara 7 12 0 0 58.33
Dominic Drakes run out (Kusal Mendis) 0 1 0 0 0.00
Benny Howell c Anwar Ali b Nuwan Thushara 22 9 3 1 244.44
Ravi Bopara not out 31 12 5 1 258.33
Seekkuge Prasanna c Asad Shafiq b Anwar Ali 14 6 0 2 233.33
Muditha Lakshan c Lakshan Sandakan b Anwar Ali 0 2 0 0 0.00
Kasun Rajitha not out 1 1 0 0 100.00


Extras 11 (b 6 , lb 0 , nb 0, w 5, pen 0)
Total 197/8 (20 Overs, RR: 9.85)
Bowling O M R W Econ
Imad Wasim 4 0 20 0 5.00
Nuwan Thushara 4 0 29 3 7.25
Wahab Riaz 4 0 61 1 15.25
Anwar Ali 4 0 44 3 11.00
Lakshan Sandakan 4 0 37 0 9.25



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<