கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையில் இன்று (11) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஏழாவது லீக் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றயீட்டியது.
இதன்மூலம் இம்முறை போட்டித் தொடரில் முதலிரெண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, முதல் வெற்றியைப் பதிவு செய்ததுடன், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 3 போட்டிகளில் ஆடி 2 தோல்வியைப் பெற்றுக் கொண்டது.
தனுக தாபரே, குசல் மெண்டிஸ் மற்றும் லஹிரு உதார மற்றும் நுவன் பிரதீப், இப்திகார் அஹ்மட் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு என்பன கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
முன்வரிசை வீரர்களான தனுக தாபரே, குசல் மெண்டிஸ் மற்றும் லஹிரு உதார ஆகியோரது ஆகியோரது துடுப்பாட்ட பங்களிப்புடன் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக 2ஆம் இலக்கத்தில் களமிறங்கிய லஹிரு உதார 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுக்க, குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், அறிமுகப் போட்டியில் விளையாடிய ஆரம்ப வீரர் தனுக தாபரே 36 ஓட்டங்களையும் எடுத்தனர்.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
- அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ் அணி
- திக்வெல்ல மற்றும் பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்புடன் கொழும்புக்கு முதல் வெற்றி
- தோல்வியுறாத அணியாக தொடரில் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அந்த அணியின் துடுப்பாட்டத்தில் மீண்டும் அசத்திய நிரோஷன் திக்வெல்ல 44 பந்துகளில் 58 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். இம்முறை போட்டித் தொடரில் அவரது 2ஆவது அரைச் சதம் இதுவாகும்.
அத்துடன், பின்வரிசையில் வந்த ரவி பொப்பாரா 35 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தாலும் ஏனைய வீரர்களினால் கிடைத்த சொற்ப பங்களிப்பு அந்த அணியின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. இதனால் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 25 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் இப்திகார் அஹ்மட், வஹாப் ரியாஸ் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வீரர் லஹிரு உதார தெரிவாகியிருந்தார்.
இந்த நிலையில், ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ள ஓரா அணிகளுக்குடையிலான 8ஆவது லீக் போட்டி இன்று (11) இரவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Thanuka Dabare | c & b Jeffrey Vandersay | 36 | 27 | 5 | 0 | 133.33 |
Kusal Mendis | c Niroshan Dickwella b Ravi Bopara | 39 | 27 | 5 | 2 | 144.44 |
Lahiru Udara | not out | 45 | 30 | 5 | 1 | 150.00 |
Azam Khan | c Suranga Lakmal b Nawod Paranavithana | 8 | 13 | 1 | 0 | 61.54 |
Iftikhar Ahmed | b Jeffrey Vandersay | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Nuwanidu Fernando | c Jeffrey Vandersay b Naveen Ul Haq | 29 | 16 | 3 | 2 | 181.25 |
Imad Wasim | c Karim Janat b Dominic Drakes | 6 | 3 | 1 | 0 | 200.00 |
Wahab Riaz | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 8 (b 0 , lb 2 , nb 1, w 5, pen 0) |
Total | 174/6 (20 Overs, RR: 8.7) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Angelo Mathews | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Suranga Lakmal | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Naveen Ul Haq | 4 | 0 | 41 | 1 | 10.25 | |
Dominic Drakes | 3 | 0 | 32 | 1 | 10.67 | |
Charith Asalanka | 1 | 0 | 7 | 0 | 7.00 | |
Jeffrey Vandersay | 4 | 0 | 31 | 2 | 7.75 | |
Ravi Bopara | 1 | 0 | 4 | 1 | 4.00 | |
Nawod Paranavithana | 4 | 0 | 28 | 1 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | not out | 58 | 44 | 8 | 0 | 131.82 |
Angelo Mathews | c Kusal Mendis b Nuwan Thushara | 9 | 10 | 2 | 0 | 90.00 |
Karim Janat | c Azam Khan b Wahab Riaz | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Nawod Paranavithana | b | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Charith Asalanka | c Kusal Mendis b Iftikhar Ahmed | 5 | 7 | 0 | 0 | 71.43 |
Ravi Bopara | c Kusal Mendis b Nuwan Pradeep | 46 | 35 | 2 | 3 | 131.43 |
Dinesh Chandimal | c Imad Wasim b Nuwan Pradeep | 16 | 9 | 2 | 0 | 177.78 |
Dominic Drakes | c Nuwanidu Fernando b Wahab Riaz | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Suranga Lakmal | not out | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Extras | 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0) |
Total | 149/7 (20 Overs, RR: 7.45) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Imad Wasim | 4 | 0 | 24 | 0 | 6.00 | |
Nuwan Thushara | 4 | 1 | 23 | 1 | 5.75 | |
Nuwan Pradeep | 4 | 0 | 52 | 2 | 13.00 | |
Wahab Riaz | 4 | 0 | 21 | 2 | 5.25 | |
Iftikhar Ahmed | 2 | 0 | 12 | 2 | 6.00 | |
Lakshan Sandakan | 2 | 0 | 17 | 0 | 8.50 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<