ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலம்

363

நாளை வெள்ளிக்கிழமை (05) நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் வீரர்கள் ஏலம் (Players Draft), எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) மீண்டும் நடாத்தும் நோக்கில் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

LPL தொடரின் வீரர்கள் வரைவுக்கான திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெறும் காலப்பகுதியில் தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்படுவதன் காரணமாகவே, இந்த வீரர்கள் ஏலம் அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு (09) ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில், இலங்கையின் 300 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 300 பேர் என 600 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். குறித்த இந்த வீரர்கள் ஏலமானது, காணொளி சந்திப்பின் (Video Conference) மூலமாக இடம்பெறவுள்ளதுடன் இதில் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் மற்றும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் ஐந்து அணிகளின் உரிமையாளர்களும் பங்குபற்றவுள்ளனர்.

இருபது சுற்றுக்களாக நடைபெறவுள்ள இந்த வீரர்கள் ஏலத்தில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஐகோன் வீரர்கள் (Icon), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு டயமண்ட் வீரர்கள் (Diamond), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கோல்ட் வீரர்கள் (Gold), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கிளாசிக் (Classic) வீரர்கள் என்ற பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உலகக் கிணத்தை உச்சத்தில் முடிக்க பெரேராவுக்கு நெருக்கடி

அதேநேரம், இலங்கையில் உள்ள இளம் வீரர்களை கண்டறியும் நோக்கில், உள்நாட்டு வளர்ந்து வரும் வீரர்கள் (Local Emerging) மற்றும் சப்லிமண்டரி வீரர்கள் (Supplementary Local) என்ற பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் அறிவிக்கப்படும் குழாத்தில் அதிகபட்சமாக 20 வீரர்கள் இருக்கவேண்டும் என்பதுடன், 6 வெளிநாட்டு வீரர்களை உள்வாங்க முடியும்.

அதேநேரம், கடந்த ஆண்டு விளையாடிய வீரர்களிலிருந்து அணியொன்று, உள்ளூர் வீரர்கள் நால்வர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருவர் என 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். ஏனைய வீரர்களை வீரர்கள் ஏலத்திலிருந்து இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டுக்கான LPL தொடர், டிசம்பர் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச  மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<