தென்னாபிரிக்காவுடனான லீக் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நாணய சுழற்சி அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது போல தமது அணியில் உள்ள அனுபவமிக்க வீரர்களின் பஙகளிப்பு அதில் முக்கிய பங்கு வகித்ததாக பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மொர்தசா தெரிவித்தார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (02) நடைபெற்ற 5 ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்காவை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி சாதனை வெற்றியொன்றைப் பெற்றது.
உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த பங்களாதேஷ்
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…
துடுப்பாட்டத்துக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதலில் பங்களாதேஷ் அணிக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த தென்னாபிரிக்க அணி, மோசமான களத்தடுப்பு, பந்துவீச்சு மற்றும் பொறுப்பற்ற தலைமைத்தவம் என்பவை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு 330 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இடமளித்தது.
மாறாக நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி தோற்றாலும், அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட துடுப்பாட்ட வரிசை மற்றும் இளம் வீரர்களின் பந்துவீச்சு வரிசை என்பவை காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு பதிலடி கொடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்களுடன் தமது முதலாவது உலகக் கிண்ண வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தசா தென்னாபிரிக்க அணியுடனான வரலாற்று வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையில்,
நாணய சுழற்சியில் தோல்வியைத் தழுவியதால் தான் முதலில் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்பட்டது. எனினும், போட்டி ஆரம்பமாவதற்கு அரை மணித்தியாலங்களுக்கு முன் நாணய சுழற்சியில் வென்றால் துடுப்பெடுத்தாடுவதா அல்லது பந்துவீசுவதா என நிறைய யோசித்தோம். எனினும், இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தோம்.
எனவே முதலில் துடுப்பெடுத்தாடுவது தவறாக இருக்காது என நினைத்தோம். உண்மையில் முஸ்பிகுர் ரஹீமும், இதுபோன்ற இன்னிங்சுகளில் சிறப்பாக விளையாடுவார். அத்துடன் சகீப் அல் ஹசனும் நன்றாக விளையாடினார். அதேபோல சௌம்யா சர்காரின் ஆரம்பமும், மஹ்மதுல்லாஹ் மற்றும் மொசாடிக் ஹொசைன் ஆகியோர் இறுதி ஓவர்களில் பெற்றுக்கொண்ட இணைப்பாட்டத்தால் நல்லதொரு ஓட்ட எண்ணிக்கையைப் பெற முடிந்தது. எனவே நாயண சுழற்சியை இழந்தது ஒருவகையில் அதிர்ஷ்டம் என கருதுகிறேன்.
இதேநேரம், நாங்கள் சரியான இடங்களில் பந்து வீச வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தோம், எமது பந்து வீச்சாளர்களை மாற்றி விக்கெட்டுக்களை எவ்வாறு கைப்பற்ற வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்தோம். எனவே அதை நாங்கள் சிறப்பாக செய்தோம் என நம்புகிறேன். அத்துடன் சுழல் பந்துவீச்சாளர்களும் தமது கடமையை சிறப்பாகச் செய்தனர்.
சகீப் அல் ஹசனை ஏன் 3 ஆம் இலக்கத்தில் களமிறக்கியது என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மஷ்ரபி கருத்து வெளியிடுகையில்,
கடந்த வருடத்திலிருந்து அவர் 3 ஆம் இலக்கத்தில் விளையாடி வருகின்றார். துரதிஷ்டவசமாக அவர் இறுதிப் போட்டியில் உபாதைக்குள்ளானார். அதனையடுத்து சுமார் 6 மாதாங்குளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய சகீப், ஒரு சில போட்டிகளில் 5 ஆம் இலக்கத்தில் களமிறங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அயர்லாந்து அணியுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரிலும், பயிற்சிப் போட்டியிலும் அவர் மறுபடியும் 3 ஆம் இலக்கத்தில் துடுப்பாட வந்தார். எனவே ஒரு அனுபவமிக்க வீரராக அவரை நாங்கள் 3 ஆம் இலக்கத்தில் களமிறக்கினோம் என்றார்.
Rampant Bangladesh add to South Africa’s World Cup agony
This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of upload. Bangladesh made…
இது பங்களாதேஷ் அணியின் மிகச் சிறந்த இன்னிங்ஸா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
அவ்வாறு கிடையாது. இதற்கு முன் நாங்கள் ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடியிருக்கிறோம். அதிலும் 2007, 2011 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தோம். எனவே இந்தப் போட்டியை சிறந்தது என நான் கருதவில்லை. ஆனாலும், இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி எமது வீரர்களின் திறமையை வெளிப்படுத்தினோம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் எந்தநாளும் கிடைக்காது.
அதேபோன்று ஒரு போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அனைத்து விடயங்களையும் சரியாகச் செய்து விட்டோம் என கூறமுடியாது. ஒரு சில துறைகளில் நாங்கள் இனனும முன்னேற்றம் காணவேண்டும்.
அனுபவமிக்க வீரர்க்ள் அணியில் இருப்பது மிகப் பெரிய பலம். இதுதான் எமது அதிசிறந்த அணியென்று சொல்ல முடியும். எமது அணியை எடுத்துக் கொண்டால் தமீம் இக்பால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், சகீப் அல் ஹசன் 3 ஆவது இலக்கத்திலும், முஸ்பிகுர் ரஹீம் 4 ஆவது இலக்கத்திலும் மஹ்மதுல்லாஹ் 6 ஆவது இலக்கத்திலும் விளையாடுவது எமக்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்துள்ளது. எனவே எம்மிடம் மிகவும் பலம் மிக்க துடுப்பாட்ட வரிசையொன்று உள்ளது.
அதேபோன்று, முஸ்பிகுர் ரஹீமும் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோர் இன்றைய போட்டியில் நோன்பு பிடித்துக் கொண்டு விளையாடியது உண்மையில் பாராட்டத்தக்கது.
உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பத்தை பெறத் தவறியிருக்கும் இலங்கை
இலங்கை கிரிக்கெட் அணிக்கு…
உண்மையில் எமது இந்த வெற்றிக்குப் பின்னால் பங்களாதேஷ் ரசிகர்களும் இருந்தார்கள் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். எனவே எதிர்வரும் போட்டிகளிலும் அவர்கள் இதேபோன்று ஆதரவாளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே, நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என தெரிவித்தார்.
>>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<