இந்த மாத இறுதியில் பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக வேகப்பந்துவீச்சாளரான லோக்கி பெர்குஸன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் போட்டிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது SLC
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.
செப்டம்பர் மாதம் 21, 23 மற்றும் 26ஆம் திகதிகளில் பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெறவுள்ள இந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி பெரும்பாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனுபவம் குறைந்த வீரர்களுக்கே வாய்ப்பு வழங்கியிருக்கின்றது.
அடுத்த மாதம் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் இதனை இலக்காகக் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது. அதன்படி நியூசிலாந்து ஒருநாள் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், டோம் லேதம், டெவோன் கொன்வேய், மிச்சல் சான்ட்னர் மற்றும் டிம் சௌத்தி ஆகிய முன்னணி வீரர்களுக்கு பங்களாதேஷ் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் மார்க் சாப்மன், ஜேம்ஸ் நீஷம் போன்ற வீரர்களும் சொந்தக் காரணங்கள் கருதி பங்களாதேஷூக்கான நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்படவில்லை. இவர்கள் தவிர நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டே்டிற்கும் பங்களாதேஷ் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளரான லூக் ரொன்ச்சி நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளராக பங்களாதேஷ் தொடரில் செயற்படவிருக்கின்றார்.
புலிந்து பெரேராவின் அபார ஆட்டத்துடன் இளையோர் தொடரை வென்றது இலங்கை
நியூசிலாந்து குழாம்
லோக்கி பெர்குஸன் (தலைவர்), பின் அலன், டொம் பிளன்டல், ட்ரென்ட் போல்ட், சாட் போவ்ஸ், டேன் கிளிவர், டீன் பொக்ஸ்ரொப்ட், கைல் ஜேமிசன், கோல் மெக்கோன்ச்சி, அடம் மில்னே, ஹென்ரி நிக்கோல்ஸ், ரச்சின் ரவிந்திரா, இஸ் சோதி, ப்ளைர் டிக்னர், வில் யங்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<