இலங்கைக்கு எதிரான T20 தொடரில் இருந்து வெளியேறும் லோக்கி பெர்குஸன்

177

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான லோக்கி பெர்குஸன் விரல் உபாதை ஒன்றினை எதிர்கொண்டதனை அடுத்து இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார்.

அணியின் தேவைகருதி ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன் – குசல் மெண்டிஸ்

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நான்காவது…

லோக்கி பெர்குஸன் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டிக்கு முன்னர் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தனது கட்டை விரலில் உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருந்தார். இந்த உபாதை தொடர்பில் பெர்குஸனை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திய போது அவரது கட்டை விரல் நடுப்பகுதியில் சிறிய உபாதை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது. 

இவ்வாறாக உபாதை கண்டறியப்பட்டதனை அடுத்தே லோக்கி பெர்குஸன் இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார். 

எனினும், நியூசிலாந்து கிரிக்கெட் சபை லோக்கி பெர்குஸனுக்கு பதிலாக பதில் வீரர் எவரினையும் தமது குழாத்திற்குள் உள்வாங்கவில்லை.

இதேநேரம், லோக்கி பெர்குஸனின் உபாதை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டேட், ”இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக செயற்பட்ட லோக்கி பெர்குஸனை இந்த தொடரில் இழப்பது ஏமாற்றம் தருகின்றது.” எனக் குறிப்பிட்டார். 

T20 சர்வதேச போட்டிகளில் மாலிங்க புதிய உலக சாதனை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் இன்று (1)..0

மேலும், லோக்கி பெர்குஸனின் விரல் உபாதை குணமாக இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்கள் வரையில் எடுக்கும் எனவும் தெரிவித்த கேரி ஸ்டேட், நவம்பர் மாதம் நியூசிலாந்தில் ஆரம்பமாகும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் லோக்கி பெர்குஸன் ஆட உடற்தகுதியுடன் இருப்பார் எனவும் கூறினார்.

அதேவேளை, இலங்கைக்கு எதிரான T20 தொடரில் நியூசிலாந்து அணி போதுமான வீரர் குழாத்தினை கொண்டிருப்பதால் லோக்கி பெர்குஸனுக்கு பதிலாக வேறோரு வீரர் தேவையில்லை எனவும் கேரி ஸ்டேட் குறிப்பிட்டிருந்தார்.  

இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. 

இந்நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் T20 தொடரின் அடுத்த போட்டி முதல் T20 போட்டி இடம்பெற்ற அதே மைதானத்தில் நாளை (3) ஆரம்பமாகின்றது. 

>> மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளை படிக்க <<