இலங்கை அணியுடனான நான்காவது ஒரு நாள் போட்டியில், கிரேக் எர்வின்னின் அதிரடி துடுப்பாட்டதினால் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி தொடரை 2-2 என சமநிலைப்படுத்தியுள்ளது.
இதனால், கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 200 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் படைத்த சாதனை பலனற்றுப் போனது.
ஜிம்பாப்வே அணியுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில், ஏற்கனவே 2-1 என்ற அடிப்படையில் இலங்கை அணி முன்னிலை பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தொடரை வெற்றிகொள்ளும் நோக்கில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
கடந்த போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், நுவான் பிரதீப் தொடை காலில் ஏற்றப்பட்ட தசை பிடிப்பு காரணமாக, அவருக்கு இந்த போட்டி உட்பட எஞ்சியுள்ள இறுதிப் போட்டிக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, 19 வயதேயான வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ தனது முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை அணியில் அறிமுகமானார்.
அது போன்று, ஜிம்பாவே அணித் தலைவர் கிரேம் கிரீமர், காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக கார்ல் மும்பாவுக்கு ஓய்வாளித்து, அவருக்குப் பதிலாக இதுவரை இந்த தொடரில் எந்த போட்டியிலும் பங்குபற்றாத வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் மொபிபுவை அணியில் இணைத்துள்ளார்.
அந்த வகையில் முதலில் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 35.2 ஓவர்கள் வரை துடுப்பாடி 209 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பதிவு செய்த அதேவேளை இலங்கை அணி சார்பாக சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
தனுஷ்க குணதிலக்கவை 87 ஓட்டங்களுக்கு நேரடியாக போல்ட் செய்த மல்கம் வால்லர் ஜிம்பாவே அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார். அத்துடன், 118 பந்துகளை எதிர்கொண்டு எட்டு பௌண்டரிகள் உட்பட 116 ஓட்டங்களை விளாசியிருந்த நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டினையும் LBW முறையில் அவர் வீழ்த்தினார்.
அதனையடுத்து, துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்யப்பட்டு குசல் மென்டிசுக்கு பதிலாக ஓட்டங்களை குவிக்கும் நோக்கில் அணித் தலைவர் அஞ்செலோ மதிவ்ஸ் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தொடர்ந்து களமிறங்கினர். இவ்விருவரும் முறையே 42, 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
4 விக்கெட்டுக்களின் பின்னர் களமிறங்கிய குசல் மென்டிஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் முறையே 1, 0 என்ற ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதிவரை அதிரடியாக துடுப்பாடிய வணிந்து ஹசரங்க இரண்டு பௌவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை விளாசினார்.
அதேநேரம், 350 ஓட்டங்களுக்கு மேல் ஓட்டங்களை குவிக்க எதிர்பார்த்திருந்த இலங்கை அணியை 300 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கிரீமர் அணியின் பந்து வீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார். இன்றைய போட்டிக்காக களமிறக்கப்பட்ட கிரிஸ் மொபிபு அணித் தலைவர் கிரேம் கிரீமரை ஏமாற்றாமல் அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
சிறப்பாக பந்து வீசிய கிரிஸ் மொபிபு, குசல் மென்டிஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ததோடு இறுதி ஓவர்களில் இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுதியிருந்தார்.
அந்த வகையில் 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 301 ஓட்டங்களை ஜிம்பாவே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாவே அணி, தோல்வியுற்றால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பம் முதலே இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து ஓட்டங்களை வேகமாக குவித்தனர். முதல் 10 ஓவர்களுக்குள் ஹமில்டன் மசகட்சா மற்றும் சொலமன் மிர் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் பந்து வீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தி வணிந்து அசரங்கவுக்கு பந்து வீசும் வாய்ப்பினை வழங்கினார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட முதல் போட்டியின் ஹட்ரிக் சாதனையாளரான வணிந்து அசரங்க, ஹமில்டன் மசகட்சாவின் விக்கெட்டினை 28 ஓட்டங்களுக்கும், அதனை தொடர்ந்து வீசிய இரண்டாவது ஓவரில் வேகமாக ஓட்டங்களை குவித்த சொலமன் மிர்ரின் விக்கெட்டினை 43 ஓட்டங்களுக்கும் வீழ்த்தி ஜிம்பாப்வே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார்.
எனினும் அதனை தொடர்ந்து களமிறங்கிய தாராசி முசகண்டா மற்றும் கிரேக் எர்வின் தொடர்ந்து ஓட்டங்களை துரிதமாக உயர்த்தினர். இந்நிலையில், 23 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்று பங்களிப்பு செய்திருந்த தாராசி முசகண்டாவின் விக்கெட்டினை ஜிம்பாப்வே அணி இழந்திருந்த நிலையில், போட்டியின் 21 ஓவரின் போது மழையின் குறுகிட்டால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதன்போது அவர்கள் 139 ஓட்டங்களை பதிவு செய்திருந்தனர்.
மழைக்கு பின்னர் போட்டி ஆரம்பித்த போதிலும், போட்டி டக்வார்ட் லூயிஸ் முறைப்படி ஏழு விக்கெட்டுகள் எஞ்சிய நிலையில் 60 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலைக்கு மீளமைக்கப்பட்டது
போட்டி விறுவிறுப்பான நிலையில், முதல் ஓவரை வீசிய துஷ்மந்த சமீர ஒரு பௌண்டரி உட்பட 6 ஓட்டங்களை ஜிம்பாவே அணிக்கு வழங்கினார். எனினும் அதனையடுத்து அசேல குணரத்ன வீசிய ஓவரில், சீன் வில்லியம்ஸ் மயிரிழையில் ரன் அவுட்டிலிருந்து தப்பித்த போதிலும், அதனை தொடர்ந்து வீசிய பந்துக்கு துடுப்பாட்ட கோட்டை தாண்டி பவுண்டரியொன்றை பெற்றுக்கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதால் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வேல ஸ்டாம்ப் முறைபடி அவருடைய விக்கெட்டினை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய மல்கம் வல்லர் அதிரடியாக மூன்று பௌண்டரிகள் உட்பட 20 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார். எனினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய கிரேக் எர்வின் எட்டு பௌண்டரிகள் உள்ளடங்கலாக 55 பந்துகளில் 69 ஓட்டங்களை விளாசி ஜிம்பாவே அணியின் வெற்றியை உறுதி செய்தார். அத்துடன் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இத்தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி இதே மைதானத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
Sri Lanka - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Niroshan Dickwella | LBW b Waller | 116 (118) |
Danushka Gunathilaka | b Waller | 87 (101) |
Angelo Mathews | c Masakadza b Chatara | 42 (40) |
Upul Tharanga | b Raza | 22 (21) |
Asela Gunarathne | c Williams b Mpofu | 1 (3) |
Kusal Mendis | c Waller b Mpofu | 0 (1) |
Wanindu Hasaranga | Not Out | 19 (17) |
Dushmantha Chameera | ||
Lakshan Sandakan | ||
Lasith Malinga | ||
Asitha Fernando | ||
Total | Extras (13) | 300/6 (50 overs) |
Zimbabwe - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Christopher Mpofu | 9 | 0 | 61 | 2 |
Tendai Chatara | 5 | 0 | 32 | 1 |
Sikandar Raza | 9 | 0 | 56 | 1 |
Sean Williams | 5 | 0 | 37 | 0 |
Solomon Mire | 3 | 0 | 21 | 0 |
Graeme Cremer | 9 | 0 | 47 | 0 |
Malcolm Waller | 10 | 0 | 44 | 2 |
Zimbabwe - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Hamilton Masakadza | c Hasaranga | 28 (36) |
Solomon Mire | c Mathews b Hasaranga | 43 (30) |
Tarisai Musakanda | c Dickwella b Chameera | 30 (23) |
Craig Ervine | Not Out | 69 (55) |
Sean Williams | st Dickwella b Gunarathne | 6 (9) |
Sikandar Raza | c & b Hasaranga | 10 (10) |
Malcolm Waller | c Gunathilaka b Sandakan | 20 (13) |
PJ Moor | Not Out | 0 (0) |
Graeme Cremer | ||
Christopher Mpofu | ||
Tendai Chatara | ||
Total | Extras (13) | 219/6 (29.2 Overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Lasith Malinga | 4 | 1 | 18 | 0 |
Asitha Fernando | 2 | 0 | 22 | 0 |
Dushmantha Chameera | 5 | 0 | 32 | 1 |
Asela Gunarathne | 7 | 0 | 41 | 1 |
Wanindu Hasaranga | 6 | 0 | 40 | 3 |
Lakshan Sandakan | 3.2 | 0 | 45 | 1 |
Danushka Gunathilaka | 2 | 0 | 16 | 0 |