பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்

Bangladesh Cricket

400

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியின் தலைவராக லிடன் டாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் ஒருநாள் அணியின் தலைவர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீர் அறிவிப்பை நேற்று வியாழக்கிழமை (6) வெளியிட்டிருந்தார்.

>> உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவான 10ஆவது அணியாக நெதர்லாந்து

தமிம் இக்பால் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக மீதமுள்ள 2 போட்டிகளில் லிடன் டாஸ் அணித்தலைவராக செயற்படுவார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் லிடன் டாஸ் அணித்தலைவராக செயற்பட்டாலும்,  டெஸ்ட் மற்றும் T20i போட்டிகளுக்கான முழுநேர தலைவராக செயற்பட்டுவரும் அனுபவ வீரர் சகீப் அல் ஹஸன் ஒருநாள் போட்டிகளுக்கான முழுநேர தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் தொடரின் போது தமிம் இக்பால் உபாதையடைந்த நிலையில், அவருக்கு பதிலாக அணியை வழிநடத்திய லிடன் டாஸ் தொடரை 2-1 என வென்றுகொடுத்திருந்தார். அதேநேரம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சகீப் அல் ஹஸன் உபாதை காரணமாக விளையாடாத நிலையில், குறித்த போட்டியிலும் தலைவராக செயற்பட்டு அணிக்கு லிடன் டாஸ் வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சனிக்கிழமை (7) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<