பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான லிடன் தாஸ் ஆசியக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாத்தில் இருந்து வெளியேறியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
ஆசியக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்த லிடன் தாஸ், காய்ச்சல் மூலம் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்க இலங்கை வந்த பங்களாதேஷ் குழாத்துடன் இணைந்திருக்கவில்லை.
இவ்வாறு விடயங்கள் இருக்க லிடன் தாஸ் பூரணமாக உடல் தேறாது போக தற்போது ஆசியக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார். கடந்த 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பங்களாதேஷ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷிற்காக அதிக ஓட்டங்கள் குவித்திருக்கும் லிடன் தாஸ் இல்லாத நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இதேநேரம் லிடன் தாஸிற்குப் பிரதியீடாக முன்வரிசை விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான அனாமுல் ஹக், பங்களாதேஷ் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
இறுதியாக 2022ஆம் ஆண்டின் இறுதியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டியொன்றில் ஆடிய அவர் இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் ஆடி 30.58 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 1254 ஓட்டங்களை குவித்திருக்கின்றார்.
முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் இந்தியாவின் முன்னணி வீரர்!
அதேநேரம் அனாமுல் ஹக் இன்று (30) பங்களாதேஷ் குழாத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ஆசியக் கிண்ணத்திற்கான தமது முதல் போட்டியில் நாளை பங்களாதேஷ் வீரர்களை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<