FIFA வின் சிறந்த கால்பந்து வீரரானார் மெஸ்ஸி

The Best FIFA Football Awards 2023

96

உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஆர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றார்.  

முன்னதாக, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் குறித்த விருதை மெஸ்ஸி வென்றிருந்தார். இதன்படி, 3ஆவது முறையாக இந்த விருதை அவர் பெற்றுக்கொண்டார் 

இதன்மூலம், பிஃபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 3 தடவைகள் வென்ற முதல் வீரராக மெஸ்ஸி வரலாற்றில் இடம்பிடித்தார்.   

சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா ஆண்டு தோறும் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டுக்கான பிஃபாவின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் (15) லண்டனில் நடைபெற்றது 

இதில் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை பெறுபவர் யார் என்பதில் ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கும், நோர்வேயின் எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இருவரும் 48 புள்ளிகளுடன் சமமான நிலையில் இருந்தனர். 

எவ்வாறாயினும், தேசிய கால்பந்து அணிகளின் தலைவர்கள் அளித்த வாக்கின் மூலம் எர்லிங் ஹாலண்டை விட கூடுதலாக 5 புள்ளிகள் பெற்று மெஸ்ஸி 2023ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார் 

அவருக்கு அடுத்தபடியாக எர்லிங் ஹாலண்ட் சற்றே குறைந்த அளவில் புள்ளிகள் எடுத்து 2ஆவது இடத்தையும், பிரான்ஸின் கைலியன் எம்பாப்பே மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். 

கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். ஏற்கனவே பிரான்ஸ் விளையாட்டுப் பத்திரிகையினால் வழங்கப்படும் பாலோன் டி ஓர் (ballon d’or) விருதை 8 தடவைகள் கைப்பற்றி மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

அதேபோல, 2023ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக அய்ட்னா பொன்மாட்டி தேர்வு செயப்பட்டுள்ளார். ஸ்பெயின் தேசிய அணிக்காவும், பார்சிலோனா மகளிர் அணிக்காகவும் விளையாடி வரும் இவர் முதல் முறையாக பிஃபாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை என்ற பட்டத்தை வென்றுள்ளார் 

ஸ்பெயினுக்கு மகளிர் உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்ததில் பெரும் பங்காற்றினார் அய்டானா, மேலும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா மகளிர் அணியை வழிநடத்தியிந்தார் அய்டானா 

குறிப்பாக, கடந்த ஓராண்டில் அய்டானா பாலோன் டி ஓர் (ballon d’or), கோல்டன் போல் விருது, UEFA விருது ஆகியவற்றையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, ஆண்டின் சிறந்த அணியின் முகாமையாளர் விருதை மான்செஸ்டர் சிட்டியின் பெப் கார்டியோலா வென்றார். 

>>மேலும்பலகால்பந்துசெய்திகளைப்படிக்க<<