பிஃபாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை தனது சக போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை பின்தள்ளி ஆர்ஜன்டீனா நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தட்டிச் சென்றார்.
ப்ரீமியர் லீக்கை வெற்றியுடன் ஆரம்பித்த மன்செஸ்டர் யுனைடெட், ஆர்சனல்
ஓல்ட் டிரபர்ட்டில் நடைபெற்ற செல்சிக்கு எதிரான ………
இத்தாலியின் மிலான் நகரில் திங்கட்கிழமை (23) இரவு இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த மாதம் இடம்பெற்ற UEFA வீரர் விருதை வென்ற வேர்ஜில் வான் டிஜ்கை பின்தள்ளி பார்சிலோனா முன்கள வீரர் மெஸ்ஸி இந்த விருதை வென்றது எதிர்பாராததாக இருந்தது. வேர்ஜில் வான் டிஜ்க் கடந்த சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்ல லிவர்பூல் அணிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஜுவன்டஸ் முன்கள வீரர் ரொனால்டோ இருந்தபோதும் அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. எனினும் பிஃபாவின் சிறந்த உலகப் பதினொருவர் அணியில் மெஸ்ஸியுடன் அவர் இடம்பிடித்தார்.
இந்நிலையில் 32 வயதான மெஸ்ஸி மற்றும் 28 வயது வான் டிஜ்க் இருவரும் தற்போது பலோன் டியோர் விருதுக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளனர். இந்த விருது எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
அத்துடன், பிஃபாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற மெஸ்ஸி “எனக்கு அங்கீகாரத்தை அளிக்க தீர்மானித்தவர்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என கருத்து தெரிவித்திருந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிஃபா சிறந்த வீரர் விருதை மெஸ்ஸி வெல்வது இது முதல்முறையாகும். ரொனால்டோ 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்த விருதை வென்றதோடு, கடந்த ஆண்டு குரோஷியாவின் லூகா மொட்ரிக் இந்த இருவரையும் பின்தள்ளி விருதை தட்டிச் சென்றார்.
மெஸ்ஸி கடந்த பருவத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக கோல்களாக 12 கோல்களை பெற்றார். எனினும் பார்சிலோனா அரையிறுதியில் லிவர்பூலிடம் தோற்று வெளியேறியது.
அதேபோன்று ஸ்பெயினின் லா லிகா தொடரில் 36 கோல்களை பெற்ற மெஸ்ஸி தங்கப் பாதணியை வென்றதோடு ஆர்ஜன்டீன அணி 2019 கோப்பா அமெரிக்க தொடரில் வெண்கலப் பதக்கம் வெல்லவும் உதவியிருந்தார்.
அமெரிக்காவின் மேகன் ரபினோ ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார்.
சம்பியன்ஸ் லீக்கில் டொட்டன்ஹாமை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை வென்ற லிவர்பூல் அணியின் முகாமையாளர் ஜுர்கன் கிளப்ஸ் சிறந்த பயிற்சியாளருக்கான விருதினை வெற்றிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<