IPL தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டன் திடீர் விலகல்

Indian Premier League - 2021

199
Rajasthan Royals Twitter

இம்முறை இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் இங்கிலாந்து வீரரான லியாம் லிவிங்ஸ்டன் திடீரென ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.

நீண்ட நாட்கள் பயோபபுள் என்றழைக்கப்படுகின்ற பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து உளவியல் ரீதியாக தான் சோர்வடைந்;துள்ளதாக தெரிவித்திருந்த லியாம் லிவிங்ஸ்டனை .பி.எல் போட்டியிலிருந்து விடுவிக்கப்பதற்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது

IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

இதன்படி, 27 வயதான லியாம் லிவிங்ஸ்டன் நேற்றுமுன்தினம் (20) இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அவரது முடிவை நாங்கள் புரிந்துகொண்டு மதிக்கிறோம், எங்களால் முடிந்தவரை அவருக்கு ஆதரவளிப்போம் என குறிப்பிட்டுள்ளது.

அண்மைக்காலமாக இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து விளையாடிய வருகின்ற லிவிங்ஸ்டன், இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா சுற்றுப்பயணங்களில் விளையாடியிருந்தார். அத்துடன், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் டி-20 தொடரிலும் விளையாடினார்.

ரோஹித் சர்மாவுக்கு 12 இலட்சம் அபராதம்

முன்னதாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் இம்முறை .பி.எல் தொடரில் இருந்து விலகிக் கொண்டனர்

அதேபோல, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக இம்முறை ஒப்பந்தம் செய்யப்பட்ட லியாம் லிவிங்ஸ்டன் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமலேயே நாடு திரும்பியுள்ளமை அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<