எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அணி சிறந்த நிலைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ள இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பொறுமையுடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் பிறகு அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு சந்திக்க ஹத்துருசிங்க பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,
லக்மால் அணியை முன்னின்று வழிநடத்தினார் – சந்திக்க ஹதுருசிங்க
பரபரப்பான மூன்றாவது டெஸ்ட்டை வென்று தொடரை சமநிலை செய்வதற்கு மேற்கிந்திய தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின்
”மேற்கிந்திய தீவுகளுக்கு நாங்கள் வந்தபோது தரவரிசையில் பின்தங்கிய நிலையில் இருந்தோம். அதிலும், மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதை நாங்கள் முன்னதாகவே அறிந்து வைத்திருந்தோம். எனினும், அதனை இலக்காகக் கொண்டு கண்டியில் நாங்கள் மேற்கொண்ட பயிற்சிகள் தற்போது பலனளித்துள்ளது” என்றார்.
முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எமது வீரர்கள் தவறுகள் இழைத்திருந்தாலும், மறுபுறத்தில் முன்னேற்றத்தை கண்டுவந்தனர். இதன் காரணமாகவே உலகில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றான பார்படோஸ் ஆடுகளத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாம் வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொண்டோம்.
தற்போது வீரர்களை அணிக்கு தேர்வு செய்வதில் மாற்றம் ஒன்று ஏற்பட்டிருப்பதனை உங்களால் அவதானிக்க முடியும். நம்பிக்கையானதும், உறுதியானதுமான அணியொன்றை கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும். உண்மையில் முன்னைய காலங்களில் அணித் தேர்வில் பல முரண்பாடுகளும், நிலையற்ற தன்மைகளும் இருந்து வந்தன. அதுவும், மஹேல, சங்கா போன்ற வீரர்களின் ஓய்வை முன்னிலைப்படுத்தி உறுதியான அணியொன்றை கட்டியெழுப்ப தவறிவிட்டனர். அதனால் தற்போது வீரர்களை இனங்கண்டு, அவர்களை தொடர்ந்து அணியில் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கனை நான் முன்னெடுத்து வருகின்றேன்.
தான் பயிற்றுவிப்பாளராகப் பதவியேற்றதன் பிறகு இலங்கை அணி ஒரேயொரு போட்டித் தொடரை (பங்களாதேஷ் தொடர்) மாத்திரம் கைப்பற்றியிருந்தாலும், தற்போது அணியில் மேற்கொண்டு வருகின்ற திட்டங்களை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதன் மாற்றத்தை விரைவில் எதிர்பார்க்க முடியும் என்பதையும் ஹத்துருசிங்க இதன்போது தெளிவுபடுத்தினார்.
எனது நோக்கம் ஒரு போட்டித் தொடரையோ அல்லது போட்டியையோ வெற்றி கொள்வது அல்ல. மாறாக அணியில் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நிலையான தன்மையை ஏற்படுத்துவதே எனது முக்கிய குறிக்கோளாகும். வீரர்களுக்காக சிறந்ததொரு அடித்தளமொன்றை உருவாக்கி இவ்வருடத்தை முடித்துக்கொண்டு அடுத்த வருட நடுப்பகுதியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு சிறந்ததொரு அணியொன்றை உருவாக்குவது ஆகும். அதிலும் ஓர் அணியாக விளையாடுகின்ற மனப்பாங்கை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.
இன்னல்களுக்கு மத்தியிலேயே வரலாற்று வெற்றி கிடைத்தது – திலான் சமரவீர
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தது
இரண்டாவது நான் அணியின் பயிற்றுவிப்பாளராக பதவியேற்று ஆறு மாதங்களே ஆகின்றன. நான் சொந்த மண்ணில் தோற்பதை நிறுத்துங்கள் என வீரர்களுக்கு தெரிவித்துள்ளேன். ஏனெனில் சிறந்த அணிகள் ஒருபோதும் சொந்த மண்ணில் தோற்பதில்லை. எனவே தற்போது உள்நாட்டு தோல்விகளை தவிர்க்கும் நோக்கிலேயே அணி பயிற்றுவிக்கப்படுகின்றது.
எனவே, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் நடைபெறவுள்ள போட்டித் தொடரில் எமது வீரர்கள் பிரகாசிப்பார்கள் என நம்புகிறோம். அதிலும் குறிப்பாக தென்னாபிரிக்காவைத் தவிர ஏனைய அணிகள் பெரும்பாலும் வெளிநாட்டு மண்ணில் வெற்றிபெறுவதற்கு மிகப் பெரிய தடுமாற்றத்தை எதிர்நோக்கி வருகின்றன. நாம் தற்போது டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தில் உள்ளோம். எனவே எதிர்காலத்தில் அனைத்து வெளிநாட்டு தொடர்களையும் கைப்பற்றினால் மாத்திரமே தரப்படுத்தலில் முன்னேற்றம் காணமுடியும் என்பது மாயை ஆகும். அதற்கு சில காலங்கள் தேவைப்படும். எனினும், எதிர்வரும் ஆறு மாதங்களில் நாங்கள் சிறந்த நிலைக்கு வந்துவிடுவோம் என அவர் தெரிவித்தார்.
அணிக்குள் புதிதாக ஒரு வீரர் இடம்பெற்றதன் பிறகு அவருக்கு தொடர்ந்து விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள ஹத்துருசிங்க, அவ்வாறு செய்யாவிட்டால் புதிய வீரர்களை அணிக்குள் இடம்பெறச் செய்வது ஏமாற்றத்தையே கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக அணியில் அடிக்கடி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. நாங்கள் காயங்கள் காரணமாக மிகப் பெரிய பிரச்சினைகளை எதிர்கொண்டோம். இதனால் நிலையான அணியொன்றை உருவாக்குவதில் தடங்கல்களை சந்திக்க நேரிட்டது. அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது எமக்கு சிறந்த அணியொன்றை கட்டியெழுப்பி இருக்கலாம். இதன் காரணமாக வீரர்களை நாங்கள் அவதானமாக கையாள வேண்டியுள்ளது. எனினும், இதற்கு மத்தயிலும் நாங்கள் முன்னோக்கி நகரவேண்டியுள்ளது. அதுமாத்திரமின்றி, தற்போது டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளுக்காக சுமார் 25 வீரர்களை இனங்கண்டுள்ளோம். இதனால் எதிர்வரும் காலங்களில் அந்த வீரர்கள் கழகங்களுக்காக விளையாடமாட்டார்கள் என நம்புகிறேன். அதை ஏன் என்று கேட்க வேண்டாம்.
லஹிரு குமாரவுக்கு 23 வயதுதான். ஆனால் அவர் அதிவேகத்துடன் பந்துவீசுகின்றார். எனினும், நாங்கள் உள்ளுர் போட்டிகளில் அவரை விளையாட செய்யமாட்டோம். காயங்கள் வருவதற்கு முன்னர் அதனை தடுப்பது அவசியம். எனவே அடுத்த வருடம் முழுவதும் அவரை சர்வதேசப் போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதற்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், மற்ற பயிற்றுவிப்பாளர்களில் இருந்து வேறுபட்ட கதாபாத்திரத்தைக் கொண்ட ஹத்துருசிங்க, ஏன் அவருக்கு விருப்பமான உதவியாளர்களை அணிக்குள் கொண்டு வருகின்றார். அவருடைய கோரிக்கைகளுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது என எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹத்துருசிங்க பதிலளிக்கையில்,
கருணாரத்னவின் அபார சதத்தோடு முடிந்த முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்
சிட்டகொங்கில் நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை A அணி மற்றும் பங்களாதேஷ் A
எனக்கு ஒரு பொறுப்பை கொடுத்தால் அதை என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப செய்வதற்குதான் நான் அதிகம் விரும்புவேன். மாறாக, நான் எவ்வாறு பொறுப்புக் கூறமுடியும்? நான் யுத்தமொன்றுக்கு செல்வதாக இருந்தால், எனக்கு ஆயதங்கள் தேவை. அதேபோன்று மற்றவர்களுக்கு விருப்பமான பயிற்றுவிப்பாளர்கள் இருந்தால், நான் ஏன் இந்தப் பதவியில் இருக்க வேண்டும். எனவே நான் என்னுடைய தனிப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கின்றேன். இன்றைய காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் தன்மையை புரிந்துகொண்டுதான் நான் அணியை முன்னெடுத்துச் செல்கின்றேன். அதுவும். நான் ஒருபோதும் உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் அல்ல. நான் எப்பொழுதும் எனது தொழிலுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன் என தெரிவித்தார்.
இறுதியாக, தொடர் தோல்விகள், உபாதைகள், வீரர்களின் ஒழுங்கீன செயற்பாடுகளால் பல நெருக்கடிகளுக்கு தொடர்ந்து முகங்கொடுத்து வருகின்ற இலங்கை அணி, சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பு, வழிநடத்தல் மூலமாக எதிர்காலத்தில் முன்னிலை பெற்று உலகின் சிறந்த கிரிக்கெட் அணியாக மாறும் காலம் விரைவில் உருவாகும் என்பதே இலங்கை ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாகும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க