இந்தியாவின் முன்னணி படகு வலித்தல் வீரரான தத்து பபான் பொக்கானல், கொரோனா வைரஸில் இருந்து தனது கிராமத்தைப் பாதுகாக்க இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யும் பணியில் களமிறங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இணையம் வழியாக கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கும் டோனி, அஸ்வின்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக….
இதன் ருத்ரதாண்டவம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் இரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் வீர வீராங்கனைகள் வீட்டிலேயே முடங்கி போய் கிடக்கிறார்கள்.
இந்த நிலையில், பெரும்பாலான வீரர்கள் சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு தங்களால் முடிந்தளவு உதவிகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே 2016 றியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றியவரும், 2018 ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றவருமான 29 வயதுடைய இந்திய படகு வலித்தல் வீரரான தத்து பொக்கானல், மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கின் தாலேகான் ருகி என்ற கிராமத்தில் வசித்து வருகின்றார்.
இவரது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது. அதேநேரம், இந்தியாவில் ஊடரங்கு பிறப்பிக்கபட்டுள்ளதால் அங்குள்ள மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பொக்கானல் வாழ்கின்ற கிராமத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தனது சகோதரன், மாமா, நண்பன் உள்ளிட்ட குடும்பத்தாருடன் இணைந்து கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் வாரம் இருமறை ஈடுபட்டு வருகின்றார். இதற்கான தான் 4 மணித்தியாலங்களை செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் கிராமத்தில் 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு நானும், தம்பியும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கிராமம் முழுவதும் சுத்தம் செய்து வருகிறோம்.
ஏனெனில் கிருமி நாசினி என்பது கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மிக முக்கியமாகத் தேவைப்படும். ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள ஏதாவது ஒரு பொருளை அல்லது இடத்தை தொடுவதற்கு நேரிடும்.
இதனால் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால் எமது கிராமத்தில் உள்ள மருத்துவமனை, பஞ்சாயத்து அலுவலகம், கோயில்கள், மரக்கறி சந்தைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழவதும் ஊடரங்கு அமுல் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<