முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய மஹராஜாஸ் அணி

1988

முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்காக ஓமானில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள லெஜன்ட்ஸ லீக் T20 தொடரின் முதல் போட்டியில், இந்திய மஹாராஜாஸ் அணி, ஆசிய லயன்ஸ் வீரர்களை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>ஐசிசியின் ஒருநாள் அணியில் இடம்பிடித்த சமீர, ஹஸரங்க!

ஆசிய லயன்ஸ்-இந்திய மஹாராஜாஸ் அணி மோதியிருந்த போட்டி நேற்று (20) ஓமானின் அல்-அமேராட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய மஹாராஜஸ் அணியின் தலைவர் மொஹமட் கைப், முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை ஆசிய லயன்ஸ் அணிக்கு வழங்கினார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆசிய லயன்ஸ் அணிக்கு, இலங்கையின் முன்னாள் வீரரான உபுல் தரங்க சிறப்பான தொடக்கத்தினை வழங்கினார்.

வெறும் 46 பந்துகளை எதிர்கொண்ட தரங்க 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் ஆசிய லயன்ஸ் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் உம் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆசிய லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் மிஸ்பா-உல்-ஹக் 30 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>கென்ய மகளிர் கிரிக்கெட் அணியினை இலகுவாக வீழ்த்திய இலங்கை

மறுமுனையில் இந்திய மஹாராஜாஸ் அணியின் பந்துவீச்சில் மன்பிரீத் கோனி 3 விக்கெட்டுக்களையும், இர்பான் பதான் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 176 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய, இந்திய மஹாராஜாஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய மஹாராஜாஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் யூசுப் பதான் 40 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்கள் பெற, மொஹமட் கைப் 37 பந்துகளில் 42 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய லயன்ஸ் அணியின் பந்துவீச்சில் உமர் குல் மற்றும் சொஹைப் அக்தார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய மஹாராஜாஸ் அணியின் யூசுப் பதான் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இனி லெஜன்ட்ஸ் லீக் தொடரில் போட்டியில், இன்று (21) ஆசிய லயன்ஸ் அணி, வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியுடன் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆசிய லயன்ஸ் – 175/7 (20) உபுல் தரங்க 66, மிஸ்பா-உல்-ஹக் 44, மன்பிரீட் கோனி 45/3, இர்பான் பதான் 22/2

இந்திய மஹாராஜாஸ் – 179/4 (19.1) யூசுப் பதான் 80, மிஸ்பா-உல்-ஹக் 44, சொஹைப் அக்தார் 21/1

முடிவு – ஆசிய லயன்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<