லெஜண்ட்ஸ் தொடரில் விளையாடவுள்ள 7 இலங்கை வீரர்கள்!

Legends Cricket League 2022

4902
Sri Lanka Legends

ஓமானில் நடைபெறவுள்ள சர்வதேசத்தின் முன்னாள் வீரர்கள் மோதும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் (Legends Cricket League) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓமானின் தலைநகரமான மஸ்கட்டில் நடைபெறவுள்ள இந்த போட்டித்தொடரில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா மஹாராஜாஸ், ஆசிய லயன்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜயண்ட்ஸ் போன்ற அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

>> U19 உலகக் கிண்ணம்: முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி

இம்மாதம் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டித்தொடரின் முதல் போட்டியில், இந்தியா மஹாராஜாஸ் மற்றும் ஆசிய லயன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளுடன் தலா இரண்டு தடவைகள் மோதவுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டியானது இம்மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டி அட்டவணை வெளியாகியுள்ள அதேநேரம், மூன்று அணிகளிலும் விளையாடவுள்ள வீரர்கள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மஹாராஜாஸ் அணியில் வீரேந்திர ஷெவாக் இர்பான் பதான் மற்றும் யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடவுள்ளனர்.

ஆசிய லயன்ஸ் அணியை பொருத்தவரை இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி அஸ்கர் ஆப்கான் மாத்திரம் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை பொருத்தவரை சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், உபுல் தரங்க, திலகரட்ன டில்ஷான், முத்தையா முரளிதரன், ரொமேஷ் கலுவிதாரன மற்றும் நுவான் குலசேகர போன்ற வீரர்கள் விளையாடவுள்ளதுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி வீரர்களான சொஹைப் மலிக், சஹிட் அப்ரிடி மற்றும் சொஹைப் அக்தார் போன்ற வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வேர்ல்ட் லெஜண்ட்ஸ் அணியை பொருத்தவரை ஜொண்டி ரொட்ஸ், பிரட் லீ,  டேனியல் வெட்டோரி, டெரன் சமி மற்றும் கெவிட் பீட்டர்சன் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடவுள்ளனர்.

ஆசிய லயன்ஸ் குழாம்

சொஹைப் அக்தார், சஹீட் அப்ரிடி, சனத் ஜயசூரிய, முத்தையா முரளிதரன், கம்ரன் அக்மால், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதாரன, திலகரட்ன டில்ஷான், அஷார் மஹ்மூட், உபுல் தரங்க, மிஸ்பா-உல்-ஹக், மொஹமட் ஹபீஸ், மொஹமட் யூசுப், உமர் அக்மல், அஸ்கர் ஆப்கான், நுவான் குலசேகர

இந்தியா மஹாராஜாஸ் குழாம்

வீரேந்திர ஷெவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரகயன் ஓஜா, நமன் ஓஜா, மன்ப்ரீட் கோனி, ஹேமங் பதானி, வேனுகோபால் ராவ், முனாப் படேல், சஞ்சை பங்கர், நயன் மொனிகா, அமித் பண்டாரி

வேர்ல்ட் ஜயண்ட்ஸ் குழாம்

டெரன் சமி, டேனியல் வெட்டோரி, பிரட் லீ, ஜொண்டி ரொட்ஸ், கெவின் பீட்டர்சன், இம்ரான் தாஹீர், ஒவிஸ் சாஹ், ஹெர்ஷல் கிப்ஸ், அல்பி மோர்கல், மோர்னே மோர்கல், கோரி எண்டர்சன், மொண்டி பெனிசர், பிரெட் ஹெடின், கெவின் ஒப்ரைன், பிரெண்டன் டெய்லர்

போட்டி அட்டவணை  (போட்டிகள் அனைத்தும் இரவு 08.00 மணிக்கு ஆரம்பம்)

  • ஜனவரி 20, 2022: இந்தியா மஹாராஜாஸ் எதிர் ஆசிய லயன்ஸ்
  • ஜனவரி 21, 2022: வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் ஆசிய லயன்ஸ்
  • ஜனவரி 22, 2022: வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் இந்தியா மஹாராஜாஸ்
  • ஜனவரி 24, 2022: இந்தியா மஹாராஜாஸ் எதிர் ஆசிய லயன்ஸ்
  • ஜனவரி 26 2022: வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் இந்தியா மஹாராஜாஸ்
  • ஜனவரி 27, 2022: வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் ஆசிய லயன்ஸ்
  • ஜனவரி 29, 2022: இறுதிப்போட்டி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<