பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் AFC தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ள தென் கொரியா மற்றும் லெபனான் அணிகளின் 23 வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரு போட்டிகளும் முறையே எதிர்வரும் 10 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இலங்கை தேசிய கால்பந்து அணி ஏற்கனவே தென் கொரியாவை சென்றடைந்திருப்பதோடு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஹ்வாசியோங்கில் உள்ள ஹ்வாசியோங் மைதானத்தில் தென் கொரியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பி.ப. 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இலங்கை அணிக்கு எதிராக மலேசியா கோல் மழை
மலேசிய அணிக்கு எதிராக கோலாலம்பூர் நகரின் தேசிய அரங்கில் நடைபெற்ற நட்புறவ…
இதற்காக தென் கொரிய அணி வலுவான 23 பேர் கொண்ட குழாத்தை அறிவித்துள்ளது. இதில் அணித் தலைவரான டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் நட்சத்திரம் சொன் ஹுயிங் மின், வார மத்தியில் நடைபெற்ற லிவர்பூலுக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் போட்டியில் கோல் பெற்ற ரெட் புல் செல்ஸ்பேர்க்கின் ஹ்வாங் ஹுசான் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று 20 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த அணியின் பின்கள வீரர் ஜீ ஜே-இக்கை முதல் முறை தேசிய அணிக்கு அழைத்துள்ளார் தென் கொரிய பயிற்சியாளரான போலோ பென்டோ. அல் அயின் கழகத்தைச் சேர்ந்த ஜே-இல் 20 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார்.
தென் கொரிய அணி தனது கோல் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே இலங்கை அணியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். எனினும் தென் கொரிய அணி தொடரில் விளையாடும் இரண்டாவது போட்டி இதுவென்பதால் அந்த அணி இந்த ஆட்டத்தை இலகுவாக எடுத்துக்கொள்ளாது.
அந்த அணி தனது முதல் போட்டியில் துர்க்மனிஸ்தானை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது.
தென் கொரிய 23 பேர் குழாம்
கோல் காப்பாளர் – கிம் செயுங் கியு (உல்சன்), ஜோ யோன் வூ (COD FC), கு சுன் யுன் (கொன்சடோல் சபோரோ).
பின் களம் – கிம் யங்-க்வொன் (கம்பா ஒசாகா), கிம் மின் ஜே (பீஜிங் குவோன் கா.க.), பார்க் ஜி-சூ (குவன்சு எவர் கிராண்டே), க்வொன் கியுங்-வொன் (ஜியோன்புக் ஹுண்டாய்), லீ ஜே இக் (அல் ரய்யான்), ஹொங் சோல் (சுவொன் சன்சுங்), கிம் ஜின் சூ (ஜியோபுக் ஹுண்டாய்), கிம் முன் ஹுவான் (பூசன் ஐ-பாரிக்)
மத்திய களம் – ஜுங் வூ-யங் (அல் சாத்), சியுங்-ஹோ பேக் (எஸ்.வி. டர்மஸ்டட்), இன் பியோம் ஹுவாங் (வன்கூவர் வைட்கெப்ஸ்), லீ கங்-இன் (வலன்சியா சி.எப்.), சான் ஹுன் க்வோன் (சி.எஸ். பிரைபேர்க்), லீ ஜே-சங் (ஹோல்ஸ்டைன் கில்), நாம் டே ஹி (அல் சாத்), லீ மொங் கியொங் (உல்சான் ஹுண்டாய்), சன் ஹியுன் மின் (டொட்டன்ஹாம்), ஹ்வாங் ஹு-சான் (ரெட் புல் சல்ஸ்பர்க்) நா சங் ஹோ (எப்.சி. டோக்கியோ)
முன் களம் – ஷின்-வூ கிம் (சங்காய் லைன் ஆர்ட்), ஹ்வாங் இயுய்-ஜோ (கீலொங் டங் போடெக்ஸ்)
இலங்கை எதிர் லெபனான்
இலங்கை வரவுள்ள லெபனான் அணி ரேஸ் கோஸ் மைதானத்தில் ஒக்டோபர் 15 ஆம் திகதி இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
லெபனான் அணியும் தனது முழுமையான குழாத்தை இந்தப் போட்டிக்காக அறிவித்துள்ளது. லெபனான் தனது முதல் போட்டியில் பியொங்யானில் வட கொரியாவை எதிர்கொண்டது. அதில் அந்த அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இலங்கை அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்வதை இட்டு அந்த அணி அவதானத்துடன் உள்ளது. இங்கு கொரியாவும் ஒரு கோல் வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது.
லெபனான் தனது அனுபவ முன்கள வீரர்களான ரபிஹ் அதாயா மற்றும் ஹசன் மாதுக்கில் தங்கி இருப்பதோடு லெபனானுக்கு வெளியில் விளையாடி வரும் மல்கி சகோதரர்கள் மத்திய களத்தில் அந்த அணிக்கு வலுச் சேர்க்கின்றனர்.
லெபனான் 23 பேர் குழாம்
கோல் காப்பாளர் – மஹ்தி கலீல் (அஹத்), அலி டஹர் (ஷபாப் அல் சஹல்), அஹமட் டகதூக் (நெஜ்மாஹ்)
மத்திய களம் – அப்தலாஹ் அயிஷ் (நஜ்மேஹ்), மோதாஸ் அல் ஜீனைத் (அன்சார்), ஹசன் செய்டோ – ஷிப்ரிகோ (அன்சார்), ஹுசைன் எல் செயின் (அஹத்), நூர் மன்சூர் (அஹத்), அலெக்சாண்டர் மைக்கல் மெல்கி (அல் கோர், கட்டார்), மொஹமட் செயின் டஹன் (சாபா), கசம் செயின் (நஜ்மேஹ்)
மத்திய களம் – யெஹ்யா அல் ஹிந்தி (சாபா), அத்னன் ஹைதர் (அன்சார்), மொஹமட் ஹைதர் (அஹத்), நதிர் மதார் (நஜ்மேஹ்), பிலிக்ஸ் மைக்கல் மெல்கி (ஏ.ஐ.கே. சுவீடன்), ஹொசைன் மொன்சர் (அஹத்), ஹுசைன் ராசிக் (ஷபாப் அல் சஹல்)
முன் களம் – ராபித் அதாயா (அஹத்), ஹிலால் எல் ஹொல்வே (எஸ்.வி. மெப்பன், ஜெர்மனி), அஹத் ஹிஜாஸ் (அஹத்), மொஹமட் க்துஹ் (பசுன்தரா கிங்ஸ், பங்களாதேஷ்), ஹசன் மதூக் (அன்சார்)
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<