ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டால் 5 வருட சிறைத்தண்டணை: ஹரீன்

255

விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் ஆட்டநிர்ணயம், சூதாட்டம் மற்றும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் தகுதி தராதரம் பாராமல் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை அல்லது ஐந்து மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவ்வாறான சட்டத்தை நிறைவேற்றுகின்ற முதல் ஆசிய நாடாக இலங்கை மாறும் என்பதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், அதுதொடர்பிலான சட்டமூலமொன்றை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை வீரர்கள் எவரும் ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை – ஹரீன் பெர்னாண்டோ

இலங்கை அணியில் தற்போது விளையாடி …

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு கட்டடத் தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தின் (ஸ்லாடா) 4 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் நேற்று (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”இந்நாட்டிலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தொடர்பில் அறிந்திருக்கவில்லை. அவர்களுடைய பயிற்சியாளர்களினால் வழங்கப்படுகின்ற ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்கு பாதிப்பினைப் ஏற்படுத்தும் என்பதையும் அறிந்திருக்க மாட்டார்கள். எமது நாட்டிலும் திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள் என்பதை கடந்த வாரம் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.11 செக்கன்களில் ஓடிய வீரரை வைத்து அறிந்துகொள்ள முடியும்.  

எனவே, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து, போதைப் பொருள் பாவனை என்பன வாழ்க்கையை சீரழிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விடயங்களை பாடசாலை பாடங்களில் உள்ளக்க்கப்பட வேண்டும். அதனால் அவர்களை தவறான வழிகளில் செல்வதை தடுக்க முடியும்” என தெரிவித்தார்.

இதேநேரம், விளையாட்டுத்துறையில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டணை விதிக்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், ஆட்டநிர்ணயம், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டணை விதிக்கப்பட வேண்டும். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது 5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதன்மூலம் குற்றச் செயல்களை தடுக்க முடியும்

Photo Album  : Opening Ceremony of Sri Lanka Anti – Doping Agency

நாம் மிகவும் நேசிக்கின்ற கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ந்த முக்கிய வீரரொருவருக்கு அண்மையில் இரண்டு ஆண்டுகள் போட்டித் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது எதிர்கால சந்ததியினருக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு முன்நின்று செயற்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு விசேட நன்றிகளையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன சில்வா, இன்னும் ஒரு வருடத்தில் தான் குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட் இந்தப் பயணத்தை இன்னும் பலப்படுத்துவதற்கு நீங்கள் குறித்த பதவியில் தொடர்ந்து 5 வருடங்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் ஐ.சி.சி இன் ஊழல் அதிகாரியொருவரை நியமிக்க இணக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் ..

விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிக்கி எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றனர். இதன் பின்னணியிலும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவர்கள் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தொடர்பில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். விளையாட்டுத்துறை என்பது ஒரு வகையான தியாகமாகும் எனவும் குறிப்பிட்டார்.

சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையத்தில் அதி நவீன இயந்திர பரிசோதனை உபகரணங்களைக் கொண்ட விஞ்ஞான ஆய்வு கூடம், வாசிகசாலை, பிரத்தியேக ஆய்வுகூடங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இரத்தப் பரிசோதனையின் மூலம் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளதை இனங்காண்பதற்கான நவீன ஆய்வுகூடமும் இங்கு உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<