இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனுசரணை வழங்கும் லாவா நிறுவனம்

144

இந்தியாவின் முன்னணி தொலைபேசி வியாபார நாமங்களில் ஒன்றான லாவா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது நடைபெறும் போட்டிகளில், இலங்கை அணியின் அனுசரணையாளர்களாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

>>இந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் நுவான் துஷார

அந்தவகையில் லாவா நிறுவனம் இலங்கை அணியின் அனுசரணையாளர்களாக மாறியிருக்கும் நிலையில், லாவா நிறுவனத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஜேர்சி அறிமுக நிகழ்வு இன்று (26) இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த நிகழ்வில் Universal Business Solutions முகாமையாளர் மற்றும் லாவா தொலைபேசிகளின் இலங்கை பிராந்திய உத்தியோகபூர்வ விநியோகஸ்தர் திரு. ஹெரால்ட் வன்டர்வால் இலங்கை அணியின் புதிய ஜேர்சியினை இலங்கை T20I அணியின் தலைவர் சரித் அசலன்கவிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கை அணியுடனான இணைப்போடு, லாவா வியாபார நாமம் இணைவதானது தமக்கு பெருமை தருவதாக அந்த நிறுவனத்தின் சர்வதேச வியாபாரங்களுக்கு பொது முகாமையாளர் ராகுல் பிரேந்திர சிங் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20I தொடர் நாளை (27) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<