இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை அடுத்து ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டிருக்கும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதற்தடவையாக ஒன்பதாம் இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை, இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்திய அணியுடனான இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர், இந்திய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய அனுபவத்தினைக் கொண்டிராத சந்திமால், குறித்த தொடரில் இலங்கை சார்பாக மொத்தமாக 366 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் நிர்வாகத்தை கலைப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்காக..
இதன் மூலம் இலங்கை சார்பாக இந்த டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக மாறிய சந்திமால், முன்னர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தான் இருந்த இடத்தில் இருந்து தற்போது 8 இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சந்திமாலோடு சேர்த்து, இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாட்டத்தினைக் காட்டிய அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய வீரர்களும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 111 ஓட்டங்களைக் குவித்த மெதிவ்ஸ், ஏழு இடங்கள் முன்னேறி தற்போது 23 ஆவது இடத்தினை அடைந்துள்ளார். இந்திய அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியினை சமநிலைப்படுத்த சதம் கடந்து அணிக்கு பாரிய அளவில் உதவிய தனன்ஞய டி சில்வா ஒன்பது இடங்கள் முன்னேறி தற்போது 47 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
சந்திமால் தரவரிசை முன்னேற்றத்தோடு மட்டுமல்லாது, இந்த வருடத்தில் இலங்கை அணி சார்பாக 1,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்னும், சந்திமால் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் பெற்றுக் கொண்ட தனது பத்தாவது டெஸ்ட் சதம் மூலம், இலங்கை அணிக்காக குறைந்த (80) இன்னிங்சுகளில் 10 டெஸ்ட் சதங்கள் கடந்த வீரர் என்ற சாதனையினையும் நிலைநாட்டியிருந்தார்.
டெஸ்ட் தரவரிசையில் திக்வெல்ல, தில்ருவன், கோஹ்லி முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் பேரவை ( ஐ . சி . சி .), டெஸ்ட் கிரிக்கெட்….
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 938 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர்களில், அணித் தலைவர் கோஹ்லி அபாரம் காண்பித்த முக்கிய வீரராக உள்ளார். இரண்டாவது டெஸ்டிலும் இரட்டைச் சதம் கடந்த அவர் இறுதி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 243 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன் காரணமாக, முதல் டெஸ்டின் பின்னரான தரவரிசையில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டிருந்த கோஹ்லி, தற்போதைய தரவரிசையில் 893 புள்ளிகளைப் பெற்று மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதனால் இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மூன்றாவது (879) இடத்திற்கும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டதிழந்த நியுஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஐந்தாவது (865) இடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளனர்.
மெண்டிஸ் தலைமையில் இளையோர் உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நியுஸிலாந்தில் இடம்பெறவுள்ள ICCயின் 19 வயதின்..
அதேபோன்று, இந்திய அணியின் மற்றொரு துடுப்பாட்ட வீரரான செடெஸ்வர் புஜாரா முன்னர் இருந்த அதே நான்காவது (873) இடத்தில் உள்ளார். டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவன் ஸ்மித்தின் இடத்தை கோஹ்லி பிடிப்பதற்கு அதிகமான புள்ளிகள் தேவைப்பட்டாலும், இந்திய அணிக்கு அடுத்து இடம்பெறவுள்ள சவால் மிக்க தென்னாபிரிக்க அணியுடனான தொடர் வாய்ப்பாக அமையலாம்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களிலும் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை. முதல் இடத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனும், தென்னாபிரிக்க வீரர் காஜிசோ ரபாடா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்ரன் அஷ்வின் மற்றும் இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்டில் விளையாடாத இலங்கை சுழல் வீரர் ரங்கன ஹேரத் ஆகியோர் முறையே 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் நீடிக்கின்றனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<