சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (26) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையின் படி, துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் விராட் கோஹ்லி ஆகியோர் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் முறையே முதலாம், இரண்டாம் இடங்களை பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
நீல் வெக்னரின் அதிரடி ஐந்து விக்கெட்டுகள் மூலம் இங்கிலாந்துடனான
அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர், நியூசிலாந்து – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் என்பவற்றை அடிப்படையாக கொண்டு புதிய டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், ஸ்டீவ் ஸ்மித்தின் முதலிடத்தையும் நெருங்கியுள்ளார்.
விராட் கோஹ்லி 928 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். இந்தநிலையில், அடுத்தப் போட்டியில் இவர்கள் இருவரும் பிரகாசிக்கும் விதம் எதிர்வரும் புள்ளிப்பட்டியிலில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
துடுப்பாட்ட வரிசையில் ஏனைய மாற்றங்களை பார்க்கும் போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 185 ஓட்டங்களை விளாசிய மார்னஸ் லெபுச்செங் 35வது இடத்திலிருந்து 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவருடன், டேவிட் வோர்னர் 6 இடங்கள் முன்னேறி 16வது இடத்துக்கும், ஜோ பேர்ன்ஸ் 11 இடங்கள் முன்னேறி 66வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேநேரம், பந்துவீச்சில் ஜோஷ் ஹெஷல்வூட் 13வது இடத்திலிருந்து 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் ஷான் மசூட் 7 இடங்கள் முன்னேறி 56வது இடத்தையும், ஹரிஸ் சொஹைல் 12 இடங்கள் முன்னேறி 81வது இடத்த பிடித்துள்ளதுடன், ஏனைய வீரர்கள் முன்னேற்றமடையவில்லை.
வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி
கொல்கத்தாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான
இந்திய அணியை பொருத்தவரை, விராட் கோஹ்லியை அடுத்து மயங்க் அகர்வால் ஒரு இடம் முன்னேறி, முதன்முறையாக துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 10வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சில், ஜஸ்ப்ரிட் பும்ரா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 5வது இடத்தை பிடித்துள்ளதுடன், ரவீந்திர ஜடேஜா, இசான் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் முறையே 15, 17 மற்றும் 21ம் இடங்களுக்கு முன்னேறியுள்ளனர். இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் 10வது இடத்திலிந்து 9வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.
பங்களாதேஷ் அணியை பார்க்கும் போது, தொடரை இழந்துள்ள போதும், போராட்டமான அரைச் சதத்தை பெற்ற முஷ்பிகூர் ரஹீம் 4 இடங்கள் முன்னேறி 26வது இடத்தை பிடித்துள்ளதுடன், லிடன் டாஸ் 8 இடங்கள் முன்னேறி 78வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் நிறைவில், நியூசிலாந்து அணியின் நீல் வெக்னர் மற்றும் பி.ஜே. வெட்லிங் ஆகியோர் மிகச்சிறந்த முன்னேற்றங்களை கண்டுள்ளனர்.
போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய பி.ஜே.வெட்லிங் 12 இடங்கள் முன்னேறி, துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 12வது இடத்தை பிடித்துள்ளதுடன், சதம் கடந்திருந்த மிச்சல் சென்ட்னர் 26 இடங்கள் முன்னேறி 72வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேநேரம், பந்துவீச்சில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய நீல் வெக்னர் மிகச்சிறந்த முன்னேற்றத்துடன், 3வது இடத்தை பிடித்துள்ளார். இவர், 5 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை தமது சொந்த மண்ணில் வைத்து இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வைட்வொஷ்
இங்கிலாந்து அணியை பொருத்தவரை, முதல் இன்னிங்ஸில் அரைச் சதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளதுடன், ஜோ டென்லி 17 இடங்கள் முன்னேறி 38வது இடத்தையும், ரோரி பேர்ன்ஸ் 8 இடங்கள் முன்னேறி 46வது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர் வரிசையில் செம் கர்ரன் 6 இடங்கள் முன்னேறி 54வது இடத்தை பிடித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த போதும், முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சிலரின் வீழ்ச்சியால் 2 இடங்கள் முன்னேறி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 7வது இடத்தை பிடித்துள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையின் படி, துடுப்பாட்ட வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பெட் கம்மின்ஸ், சகலதுறை வீரர்கள் வரிசையில் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க