டயலொக் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டக் கிண்ணப் போட்டிகள் நேற்று கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் சவுண்டர்ஸ் மற்றும் ரினோவ்ன் விளையாட்டுக் கழகங்கள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சம அளவாக சிறப்பாக விளையாடினாலும் முதல் பாதியில் சவுண்டர்ஸ் கழகம் 40ஆவது நிமிடத்தில் தமது முதல் கோலைப் போட்டது. இந்த கோலை சுந்தராஜ் நிரோஷ் போட்டார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் சவுண்டர்ஸ் கழகம் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் காணப்பட்டது.
பின்பு இரண்டாவது பாதி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பாதியில் எப்படியாவது ஒரு கோலைப் போட்டு போட்டியை சமநிலைப்படுத்த வேண்டும் என்ற உறுதியில் ரினோவ்ன் கழகம் விளையாடியது. இந்த உறுதியின் பலனாக 58ஆவது நிமிடத்தில் ஜொப் மைக்கலின் மூலம் ரினோவ்ன் கழகம் தமது முதல் கோலைப் போட்டது. இதனால் போட்டி 1-1 என்று சமநிலை பெற்றது. பின் இரு அணிகளும் வெற்றி கோலைப் போடுவதற்கு விளையாடின. ஆனால் போட்டி முடிய 2 நிமிடங்களுக்கு முன் மீண்டும்89ஆவது நிமிடத்தில் ரினோவ்ன் கழகத்தின் நட்சத்திர வீரர் முஹமத் பாசாலால் இன்னுமொரு கோல் போடப்பட்டது. இதன் மூலம் இந்தப் போட்டியை 2-1 என்ற அடிப்படையில் ரினோவ்ன் கழகம் வென்றது.
ThePapare.com ஆட்ட நாயகன் – சனோஜ் சமீர (சவுண்டர்ஸ் கழகம்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்