“லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீ லங்கா” கிரிக்கெட் தொடரின் வசந்த கால பருவகாலத்திற்கான (2017 ஆம் ஆண்டிற்கான) தொடரின் முதல் சுற்றுக்கான அனைத்து ஆட்டங்களும் கடந்த நான்கு வாரங்களில் நிறைவுற்றுள்ளன. இத்தருணத்தில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம்
இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட்…
காலை 9 மணியளவில் ஆரம்பமாகும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் குழு B இன் வெற்றியாளர்களான Heshan Flexe A அணியும் குழு D இன் வெற்றியாளர்களான Stafford Motors A அணியினரும் மோதிக்கொள்கின்றனர். இதேவேளை, காலை 11 மணியளவில் நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குழு A இன் வெற்றியாளர்களான Sapper Cricket Club அணியும் குழு C இன் வெற்றியாளரான The Colombo Bens அணியும் மோதுகின்றன.
அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும், அன்றைய நாள் பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கிண்ணத்திற்காக பலப்பரீட்சை நடாத்தவிருக்கின்றன.
இப்போட்டிகளின் ஸ்கோர் விபரங்கள் நேரலையாக “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீ லங்கா “இன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கின்றன. அதோடு, தொடரில் சிறப்பாக செயற்பட்ட இந்த வசந்த காலத்திற்குரிய 8 வீரர்கள் பற்றிய விபரமும் அவ் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
இத்தொடரின் இறுதிப் போட்டி நிகழ்வன்று விஷேட அதிதியாக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சுழல் வீரர்களின் ஒருவரான அஜந்த மெண்டிஸ் அழைக்கப்படவுள்ளார்.
தொடரின் விருது வழங்கல் நிகழ்வுகள் யாவும் தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும். “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீ லங்கா” கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான வெற்றியாளருக்கு பரிசாக சம்பியன் கேடயமும், 3 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும். தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெறும் அணிக்கு இரண்டாம் இடத்திற்கான கிண்ணமும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
விளையாட்டு அமைச்சரின் ஆவேசத்தால் இலங்கை விளையாட்டில் மாற்றம் ஏற்படுமா?
உடல் தகுதி அறிக்கைகள் இல்லாமல் எவ்விதமான விளையாட்டு அணிகளுக்கும்..
2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் கிரிக்கெட் போட்டியானது சாதாரண கிரிக்கெட்டினை விட சற்று வித்தியாசமாக இருக்கின்றது. அணிக்கு 8 பேர் மாத்திரமே விளையாடக்கூடிய இவ்வகை கிரிக்கெட் போட்டியில் 7ஆவது விக்கெட்டினை தொடர்ந்து இறுதித் துடுப்பாட்ட வீரர் தனியாக நின்று ஆட்டமிழக்கும் வரை துடுப்பாட முடியும். இதனாலேயே, இப்போட்டிகள் லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் (இறுதி மனிதர் வரை) என்னும் பதம் மூலம் அழைக்கப்படுகின்றன.
அனைவரையும் கவர்ந்திழுத்த இந்த விளையாட்டானது, தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் ஆனதுடன், அதன் விளைவாக தற்போது பல நாடுகளில் வீரர்களால் இவ்விளையாட்டு விரும்பி விளையாடப்பட்டு வருகின்றது.
இந்த புதுவித கிரிக்கெட்டினை உலகிற்கு அறிமுகம் செய்த இவ்விளையாட்டின் ஸ்தாபகர்கள் தற்போது இதற்காக சர்வதேச மட்டத்திலான தொடர்களை நடாத்தி வருகின்றனர். அவ்வகையான சுற்றுத் தொடர்களில் ஒன்றாக காணப்படும், லாஸ்ட் மேன் ஸ்டான்ட் உலக சம்பியன்ஷிப் தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை உலகின் பல நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்று வருகின்றன.
இவ்வருடத்திற்கான உலக சம்பியன்ஷிப் தொடர் டிசம்பர் மாதத்தில் தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெறவுள்ளது. இம்முறைக்கான “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீ லங்கா” கிரிக்கெட் தொடரின் வெற்றியாளர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகும் “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் சம்பியன்ஷிப் தொடர் -2017 பந்தயம் கேப் டவுன்” இல் பங்கேற்கின்றனர்.
இத்தொடரிற்கான அனுசரணையை “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீ லங்கா” வழங்குகின்றது. இப்பந்தய தொடரில் வெற்றி பெறும் அணியானது 2017 ஆம் ஆண்டிற்கான லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் உலக சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முடியும்.
டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுக்கொள்ளும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச..
எதிர்வரும் காலங்களில் இத்தொடரில் பங்குபற்ற விருப்பம் உள்ள அணிகள் தொடரின் முகாமையாளர், திரு. யசூர வர்ணகுலசூரியவுடன் தொலைபேசி இலக்கம் 077-0514549 மூலம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும். இவரைத் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் “லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீ லங்கா” நாம உரிமையாளர் திரு. செரான் பெர்னாந்துவை +61431060665 என்கிற தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ தொடர்பு கொண்டு தமது அணியினை பதிவு செய்து கொள்ள முடியும்.
லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் கிரிக்கெட் தொடரின் இலையுதிர் கால பருவத்திற்கான தொடர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கையில் முதற்தடவையாக நடைபெற்றிருந்தது. இதில், Heshan Flexe அணியும் LB Finance அணியும் கூட்டு சம்பியன்களாகின. தொடர்ந்து லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் ஸ்ரீ லங்கா தொடரின் குளிர்கால பருவத்திற்கான கிரிக்கெட் தொடர் கடந்த வருட டிசம்பரில் நடைபெற்றிருந்தது. அத்தொடரில் Heshan Flexe அணி சம்பியனாக நாமம் சூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.