இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியாகியதனைத் தொடர்ந்து, அந்த ஓய்வு தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக நட்சத்திரம் லசித் மாலிங்க குறிப்பிட்டிருக்கின்றார்.
>> ஓய்வு பெறப்போவதாக கூறியிருக்கும் பானுக ராஜபக்ஷ
இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களின் உடற்தகுதி சோதனைகளில் பங்குபற்றுவது தற்போது சிரமம் எனக் குறிப்பிட்டுள்ள பானுக்க ராஜபக்ஷ அந்த விடயத்தினை காரணமாகக் கொண்டு தனது ஓய்வு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) கடிதம் ஒன்றினை வழங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த கடிதம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை எந்தவித தகவல்களையும் உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில், லசித் மாலிங்க தனது ட்விட்டர் கணக்கு மூலமாக பானுக்க ராஜபக்ஷவின் ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
அந்தவகையில் லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தாயகத்தினை பிரதிநிதித்துவம் செய்வது இலகுவான காரியமல்ல எனக் குறிப்பிட்டிருப்பதோடு, அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் பல்வேறு வகையான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
>> சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அஞ்செலோ பெரேரா
அத்தோடு லசித் மாலிங்க பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகின்ற தனது முடிவினை மீள் பரிசீலணை செய்வது சிறந்த விடயம் எனக் குறிப்பிட்டிருந்ததோடு, இலங்கை கிரிக்கெட்டுக்காக பானுக்க ராஜபக்ஷ தருவதற்கு வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
Representing your country at International level is not an easy task and players always face so many challenges.
I truly believe that @BhanukaRajapak3 has a lot more to give to Sri Lankan cricket and I request him to reconsider his decision to retire from International cricket🤞— Lasith Malinga (@ninety9sl) January 5, 2022
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<