இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க மற்றுமொரு சாதனையை நிகழ்த்தவுள்ளார்.
இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க, 298 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (20) தம்புள்ளையில் நடைபெறவுள்ள முதலவாது ஒருநாள் போட்டி மாலிங்கவின் 200ஆவது ஒருநாள் போட்டியாக அமையவுள்ளதுடன், இதில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4ஆவது இலங்கை வீரராகவும், உலகின் 13ஆவது வீரராகவும் வரலாற்றில் இடம்பெறவுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிகளவு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 534 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களான வசீம் அக்ரம் மற்றும் வகார் யூனிஸ் ஆகியோர் முறையே 502, 416 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 இளையோர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2 வருடங்களுக்கு குழுக்கள் ஒருமுறை நடாத்தப்படுகின்ற 19 ..
கடந்த வருட முற்பகுதியல் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றார். எனினும், இவ்வருட முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கியதுடன், இவ்வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார். ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், இம்முறை நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெற்ற மாலிங்க, இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன், 198 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 7 ஐந்து விக்கெட்டுகள் உள்ளடங்கலாக 298 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். எனினும் 2010ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற அவர், 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்டு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முக்கிய காரணமாகவும் இருந்தார்.