அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் இடம்பெற்ற சுதிர்மான் கிண்ணத்துக்காக பட்மிண்டன் தொடரில் மூன்றாவது குழுவில் நடைபெற்ற, சீன மக்காவு அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்தது.
உலகம் முழுவதிலிருந்தும் பட்மிண்டன் வீரர்கள் கலந்து கொள்ளும் சுதிர்மான் கிண்ணத்துக்கான சம்பியன்ஷிப் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறுகின்றன. ஒவ்வொரு சுற்றுப் போட்டியிலும் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறுகின்றன. ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு, ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவு உள்ளடங்கலாக இரட்டையர் கலப்பு பிரிவுகளில் நடைபெறுகின்ற இந்த போட்டிகள், முன்னாள் பட்மிண்டன் வீரரும் இந்தோனேசிய பட்மிண்டன் சங்க நிறுவனருமான டிக் சுதிர்மான் பெயரில் மாற்றமடைந்தது.
உலக இளையோர் வலைப்பந்தாட்ட கிண்ண தொடருக்கான இலங்கைக் குழாம்
அணிகள் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு பிரிக்கப்பட்டு குழு மட்டங்களில் நடைபெறும் இந்த போட்டிகளில், குழு மட்டத்தில் அணிகள் வெளிப்படுத்தும் திறமைகளின் அடிப்படையில் முதலிடத்தை பெறும் அணி பதக்கதுக்காக போட்டியிடும். அதேநேரம் ஏனைய அணிகள் குழு மட்டத்தில் முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும். காரணம், ஒவ்வொரு வருடமும் குறைந்த திறமைகளை வெளிப்படுத்தும் அணிகள் புதிய அணிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
சுதிர்மான் 2017
ஆரம்ப கட்டத்தில் குழு மட்டப் போட்டிகளிலிருந்து குழு 3-B பிரிவுக்கு தகுதி பெற்றிருந்த இலங்கை பட்மிண்டன் அணி, குழு மட்டத்திலான வெற்றியாளரை தீர்மானிக்கும் சீன மக்காவு அணியுடனான போட்டியை எதிர்கொண்டது.
தேசிய சம்பியன் பட்டதை வென்ற மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலுக்க கருணாரத்ன, தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இலங்கை அணி சார்பாக சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டதோடு சீன மக்காவு வீரர் பெங் போங் புய்யை 21-17, 21-6. என்ற நேர் செட் கணக்கில் வெற்றியீட்டினார்.
அதேநேரம், மகளிர் ஒற்றையர் பிரிவில் வெங் சிய்யுனான போட்டியில் திலினி ஹென்தஹெவா 21-9, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அத்துடன், கவிந்தி சிரிமன்னகேயுடன் ஜோடி சேர்ந்த புவனேக்கா குணதிலக்க, இரட்டையர் பிரிவில் யு லிஒங் மற்றும் சின் கொங் ஆகியோருடனான போட்டியில் வெற்றியை பதிவு செய்து 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். இந்த ஜோடி எவ்விதமான சவாலுமின்றி, போட்டியின் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாடி சரியான தருணத்தில் போட்டியில் வெற்றியை பதிவு செய்திருந்தனர்.
போட்டிகளின் முடிவுகள்
இந்த போட்டிகளுக்கு முன்னதாக, ஸ்லோவாகியா, பிஜி மற்றும் டஹிடி ஆகிய நாடுகளுக்கு எதிராக இடம்பெற்ற குழு 3க்கான தகுதிகாண் போட்டிகளின்போது இலங்கை அணி சிறப்பான விதத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது.
அந்த வகையில் இலங்கை பெட்மிண்டன் வீரர்கள் குழு 3-Bஇல் ஸ்லோவாக்கியாவுக்கு எதிரான போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றியீட்டினர். நிலுக்க, ஆடவர் ஒற்றையர் பிரிவில் மட்டேஜ் ஹலினிசன் உடனான போட்டியில் 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கிண்ணத்தை சுவீகரித்த ஏஞ்சல், கொக்குவில் இந்து மற்றும் வேம்படி அணிகள்
திலினி ஹென்டஹேவா, மகளிர் ஒற்றையர் பிரிவில் மார்டினா ரெபிஸிகாவுக்கு எதிரான போட்டியில் 21-16, 21-19 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்தார். அத்துடன், ஸ்லோவாக்கியாவுக்கு எதிரான ஏனைய மூன்று போட்டிகளிலும் இலகுவாக வெற்றியை பதிவு செய்து தங்கப் பதக்கத்துக்காக சீன மக்காவு அணியுடனான குழு 3க்கு முன்னேறியிருந்தது இலங்கைத் தரப்பு.
போட்டிகளின் முடிவுகள்குழு மூன்றுக்கான தகுதிகாண் புள்ளிகள் பின்வருமாறு
தங்க பதக்கங்களை வென்ற இலங்கை அணி வீரர்கள் விபரம்
நிலுக்க கருணாரத்ன, சச்சின் டயஸ், புவனேக்கா குணதிலக்க, தினுக்க கருணாரத்ன, திலினி ஹென்தஹெவா, சந்திரிக்கா ஹெட்டியாரச்சிகே, லேக்ஹா ஷேஹனி, இஷண்டிகா சிரிமான்னகே