லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரினை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை நடாத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்திருக்கின்றது.
ஜேம்ஸ் அன்டர்சனின் சாதனையுடன் சமநிலையான டெஸ்ட் போட்டி
இந்த ஆண்டின் ஒகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட லங்கன் ப்ரீமியர் லீக் தொடர், இலங்கையின் விமான நிலையம் திறக்கப்படாத காரணத்தினால் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், லங்கன் இந்த தொடர் நவம்பர் மாதம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகியவிருக்கவில்லை.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை தமது கிரிக்கெட் தொடர்கள் சிலவற்றுக்கான எதிர்பார்ப்பு திகதிகளை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் மூலமே, லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் நவம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 08ஆம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற விடயம் தெரிய வந்திருக்கின்றது.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை செப்டம்பர் மாத ஆரம்பத்தில் 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபெறும் கழக அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் ஒன்றினையும் ஒழுங்கு செய்திருக்கின்றது.
இது தவிர இலங்கையின் உள்ளூர் கழக அணிகள் பங்குபெறும் மேஜர் லீக் T20 தொடரும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இடம்பெறவிருக்கின்றது.
ஐ.பி.எல் தொடருக்கான புதிய இலச்சினை வெளியீடு
அதேநேரம், லங்கன் ப்ரீமியர் லீக் தொடரில் ஐந்து அணிகள் பங்குபெறவுள்ளதோடு, 60-70 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் வரை இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட விருப்பம் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்த கிரிக்கெட் தொடர்களின் விபரம்
- 23 வயதுக்குட்பட்ட மேஜர் கழக கிரிக்கெட் தொடர் (ஒக்டோபர் 11 – செப்டம்பர் 16)
- மேஜர் கழக T20 கிரிக்கெட் தொடர் (ஒக்டோபர் 22 – நவம்பர் 8)
- லங்கன் ப்ரீமியர் லீக் (நவம்பர் 14 – டிசம்பர் 8)
- மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட மேஜர் கழக தொடர் (டிசம்பர் 13 – ஜனவரி 6)
- மேஜர் கழக டியர் A, B கிரிக்கெட் தொடர் – (ஜனவரி 15 – மார்ச் 28)
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க