இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா T10 சுப்பர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் A மற்றும் B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டிசம்பர் 11ம் திகதி ஆரம்பிக்கவுள்ள லங்கா T10 சுப்பர் லீக் தொடர் டிசம்பர் 19ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
தென்னாபிரிக்க தொடருக்கு முன்னாயத்தமாக செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம்
அதன்படி 11ம் திகதி ஆரம்பிக்கும் இந்த தொடரின் முதல் நாளிலிருந்து 17ம் திகதிவரை அனைத்து நாட்களுக்கும் தலா 3 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதனை தொடர்ந்து 18ம் திகதி குவாலிபையர் 1, குவாலிபையர் 2 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் மூன்று போட்டிகளில் முதல் போட்டி மாலை 04 மணிக்கும், இரண்டாவது போட்டி 06.15 இற்கும் மூன்றாவது போட்டி இரவு 08.30 இற்கும் ஆரம்பமாகவுள்ளன. அதேநேரம் இறுதிப்போட்டி 19ம் திகதி மாலை 05.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடரின் முதல் போட்டியில் ஜப்னா டைட்டன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணிகள் மோதவுள்ளதுடன், மேற்குறித்த இரண்டு அணிகளை தவிர்த்து கொழும்பு ஜாகுவார்ஸ், கண்டி போல்ட்ஸ், நுவரெலிய கிங்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் அணிகள் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
குழு
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<