தோல்வியுறாத அணியாக முன்னேறும் ஜப்னா டைடன்ஸ்

Lanka T10 Super League 2024

85

லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் நேற்றைய தினம் (15) மூன்று போட்டிகள் நிறைவுக்கு வந்தன. 

மழையின் தாக்கம் இல்லாமல் காணப்பட்ட ஞாயிற்றுக்கிழமை மோதல்களில் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ், கோல் மார்வல்ஸ் மற்றும் ஜப்னா டைடன்ஸ் அணிகள் வெற்றிகளை பதிவு செய்தன. 

தொடர் வெற்றிகளுடன் முன்னேறும் ஜப்னா டைடன்ஸ் வீரர்கள்

ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் எதிர் கண்டி போல்ட்ஸ் 

ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணியானது மொஹமட் ஷஹ்சாத் மற்றும் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோரது அதிரடியில் தொடரில் அணியொன்று பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்தது. இதில் சஹ்ஷாத் 18 பந்துகளை மட்டும் முகம் கொடுத்து 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகளோடு 52 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் தசுன் ஷானக்க 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகளோடு 39 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதேநேரம் ஹம்பந்தோட்டை அணியின் வெற்றியினை 47 ஓட்டங்களால் உறுதி செய்ய காரணமாக இருந்த தரிந்து ரத்நாயக்க தனது பந்துவீச்சு மூலம் கண்டி போல்ட்ஸ் அணியின் 4 விக்கெட்டுக்களை சாய்த்தமை குறிப்பிடத்தக்கது. 

போட்டி விபரம் 

ஹம்பாந்தோட்டை 163/6 (10) சஹ்ஷாத் 52(18), தசுன் ஷானக்க 39(15)*, திசர பெரேரா 26/2(2) 

 

கண்டி 116/9 (10) மொஹமட் சமாஸ் 25(13), தரிந்து ரத்நாயக்க 10/4(2)

 

முடிவுஹம்பாந்தோட்டை 47 ஓட்டங்களால் வெற்றி  

கொழும்பு ஜக்குவார்ஸ் எதிர் கோல் மார்வல்ஸ்  

கோல் மார்வல்ஸ் அணியானது இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதோடு, தொடரில் தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. கோல் மார்வல்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த ஸஹூர் கான் 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, ஜெப்ரி வன்டர்செய் மற்றும் மகீஸ் தீக்ஸன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

போட்டியின் சுருக்கம்  

கொழும்பு 82/9 (10) நஜிபுல்லா 26(15), ஸஹூர் கான் 15/2(2) 

 

காலி 83/3 (7.1) அலெக்ஸ் ஹேல்ஸ் 38(18)

 

முடிவுகோல் மார்வல்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றி  

நுவரெலியா கிங்ஸ் எதிர் ஜப்னா டைட்டன்ஸ் 

இந்த போட்டியில் டொம் அபேல்லின் அதிரடியோடு நுவரெலியா கிங்ஸ் அணியை ஜப்னா டைடன்ஸ் 53 ஓட்டங்களால் வீழ்த்தியது. அத்துடன் ஜப்னா டைடன்ஸ் அணி தொடரில் நான்காவது தொடர் வெற்றியை பதிவு செய்ய காரணமாக இருந்த டொம் அபேல் 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்தார். 

போட்டியின் சுருக்கம்  

ஜப்னா 153/4 (10) டொம் அபேல் 59(24), சாமிக்க கருணாரட்ன 34/2(2)

 

நுவரெலியா 100/8 (10) சாமிக்க கருணாரட்ன 58(24), ப்ரமோத் மதுசான் 8/3 

 

முடிவுஜப்னா டைடன்ஸ் 53 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<