லங்கா T10 சுப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஜப்னா, ஹம்பாந்தோட்டை அணிகள்

Lanka T10 League 2024

67
Lanka T10 League 2024

2024ஆம் ஆண்டுக்கான லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் பிளே ஒப் போட்டிகள் அனைத்தும் நேற்று (18) நிறைவுக்கு வந்தன.  

குவாலிபையர் 1: ஜப்னா டைடன்ஸ் எதிர் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் 

குசல் மெண்டிஸின் அதிரடியோடு ஜப்னா டைடன்ஸ் அணியானது, ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் வீரர்களினை 39 ஓட்டங்களால் வீழ்த்தியதோடு தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாகவும் மாறியது. ஜப்னா டைடன்ஸ் அணியின் சார்பில் குசல் மெண்டிஸ் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் 

>>சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ரவிச்சந்திரன் அஸ்வின்<<

போட்டியின் சுருக்கம் 

ஜப்னா டைடன்ஸ் 124/4 (10) குசல் மெண்டிஸ் 47(25), தரிந்து ரத்நாயக்க 18/1 

 

ஹம்பாந்தோட்டை 85/3 (9.3) இசுரு உதான 23(14), ட்ரவீன் மெதிவ் 13/4 

 

முடிவு ஜப்னா டைடன்ஸ் 39 ஓட்டங்களால் வெற்றி  

எலிமினேட்டர்: கோல் மார்வல்ஸ் எதிர் கண்டி போல்ட்ஸ்  

பானுக்க ராஜபக்ஷவின் அசத்தல் அதிரடியுடன் கண்டி போல்ட்ஸ் அணியினை கோல் மார்வல்ஸ் வீரர்கள் பிளே ஒப் சுற்றில் இருந்து வெளியேறிய முதல் அணியாக மாற்றினர். கோல் மார்வல்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் வெற்றியினை உறுதி செய்த பானுக்க ராஜபக்ஷ 21 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் பெற்றார் 

>>நியூசிலாந்து அணியின் முழுநேர தலைவராகும் மிச்சல் சேன்ட்னர்<<

அதேநேரம் கண்டி போல்ட்ஸ் அணிக்காக ஜோர்ஜ் முன்ஷி அதிரடி அரைச்சதம் தாண்டி 27 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் பெற்ற போதிலும் அது வீணாகியது 

போட்டியின் சுருக்கம் 

கண்டி போல்ட்ஸ் 120/4 (10) ஜோர்ஜ் முன்ஸி 61(27), மகீஷ் தீக்ஸன 27/1 

 

கோல் மார்வல்ஸ் 124/4 (8.4) பானுக்க ராஜபக்ஷ 42(21), சத்துரங்க டி சில்வா 6/2 

 

முடிவு கோல் மார்வல்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

குவாலிபையர் 2: கோல் மார்வல்ஸ் எதிர் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் 

இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணி கோல் மார்வல்ஸ் வீரர்களினை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியதோடு, லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டாவது அணியாக மாறியது. 

போட்டிச் சுருக்கம் 

கோல் மார்வல்ஸ் 90/9 (10) மொவின் சுபாசிங்க 32(14), எஷான் மலிங்க 10/3 

 

ஹம்பாந்தோட்டை 94/6 (7) ஷெவோன் டேனியல் 36(17), மகீஷ் தீக்ஸன 13/3 

 

முடிவு – ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் 4 விக்கெட்டுக்களால் வெற்றி  

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<