மழையினால் தடைப்பட்ட லங்கா T10 லீக் தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள்

Lanka T10 League 2024 

14
Lanka T10 League 2024 

லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் இன்று (12) மூன்று போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் மழையின் தாக்கம் காரணமாக ஓரு போட்டி மாத்திரமே இடம்பெற்றிருந்தது.  

>>இலங்கை கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு<<

அதன்படி ஜப்னா டைடன்ஸ் மற்றும் கொழும்பு ஜக்குவர்ஸ் இடையிலான குறிப்பிட்ட போட்டியில் சரித் அசலன்கவின் அதிரடியோடு, ஜப்னா டைடன்ஸ் அணியினர் கொழும்பு ஜக்குவர்ஸ் அணியினை 40 ஓட்டங்களால் வீழ்த்தினர் 

அதிரடி அரைச்சதம் விளாசிய சரித் அசலன்க வெறும் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேநேரம் பந்துவீச்சில் சுழல்வீரரான ட்ரெவின் மெதிவ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது பங்களிப்பினை ஜப்னா டைடன்ஸ் அணிக்கு வழங்கினார். 

மேலும் இந்த வெற்றியோடு ஜப்னா டைடன்ஸ் அணியானது தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்ய, கொழும்பு ஜக்குவர்ஸ் அணி தொடரில் இரண்டாவது தோல்வியினைப் பதிவு செய்தது 

போட்டியின் சுருக்கம் 

ஜப்னா டைடன்ஸ் – 138/6 (10) சரித் அசலன்க 56(24), அலி கான் 20/2, அஞ்செலோ மெதிவ்ஸ் 22/2 

 

கொழும்பு ஜக்குவார்ஸ் – 98/6 (10) டேனியல் லோரன்ஸ் 28(14), ட்ரவீன் மெதிவ் 18/3  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<