LPL மத்தியஸ்தர்கள் குழாத்தில் மீண்டும் பிரதீப் ஜயப்பிரகாஷ்

Lanka Premier League 2024

77

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) பணியாற்றவுள்ள போட்டி மத்தியதஸ்தர்கள் (Match Referees), போட்டி நடுவர்கள் (Umpires)) விபரத்தைஇலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இம்முறை LPLதொடரில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுநடுவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் போட்டிகளில் பணியாற்றிவரும் அதிகாரிகளுக்கும் வாய்ப்புகள்வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) போட்டி மத்தியதஸ்தர் ரஞ்சன் மடுகல்ல மற்றும் போட்டி நடுவர் குமார்தர்மசேன ஆகிய இருவரும் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் இந்த ஆண்டு LPL தொடரில் தமதுபங்களிப்பினை வழங்கவுள்ளனர்.

இம்முறை LPL தொடரில் ரஞ்சன் மடுகல்ல தலைமையிலான 5 பேர் கொண்ட போட்டி மத்தியஸ்தர்கள் குழாத்தில்கிரஹம் லப்ரோய், வென்டல் லப்ரோய் மற்றும் மனோஜ் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இலங்கையின் உள்ளூர் போட்டிகள் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான தொடர்கள் மற்றும்வளர்ந்துவரும் அணிகளுக்கான போட்டிகளில் மத்தியஸ்தராக செயற்பட்டுவந்த முன்னாள் இலங்கை வீரர் பிரதீப்ஜயபிரகாஷ் LPL தொடரில் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற எல்பிஎல்தொடரில் முதல்தடவையாக போட்டி மத்தியஸ்தராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இம்முறை LPL தொடரில் குமார் தர்மசேன தலைமையிலான நடுவர் குழாத்தில் 12 பேர்இடம்பெற்றுள்ளனர்.

நடுவர் குழாத்தில் குமார் தர்மசேனவுடன் இணைந்து ருச்சிர பல்லியகுருகே, ரவீந்திர விமலசிறி, பிரகித் ரம்புக்வெல்லஆகிய சர்வதேச போட்டி நடுவர்களும் கடமையாற்றவிருக்கின்றனர்.

இவர்கள் தவிர இலங்கையின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றுகின்ற சாமர டி சொய்ஸா, சான்த பொன்சேகா, சன்ஜீவ பெர்னாண்டோ, அசங்க நாணயக்கார, ரவிந்திர கொட்டச்சி மற்றும் எஸ்.பி.ஆர்.எல்துல்சிறி ஆகியோரும் இம்முறை LPL தொடரில் போட்டி நடுவர்களாக செயல்படவுள்ளனர்.

அதேநேரம் ஐசிசியின் நடுவர் குழாத்தில் உள்ள பாகிஸ்தானின் பைசால் கான் அப்ரிடி மற்றும் அயர்லாந்தின் ரோலண்ட்பிளெக் ஆகியோர் முதன்முறையாக வெளிநாட்டு நடுவர்களாக தொடரில் இணைந்துள்ளனர்.

LPL தொடரின் 5ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட்மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி கொழும்புஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<