தம்புள்ள அணியின் உரிமையாளர் கைது ; LPL தொடர் நடைபெறுமா?

Lanka Premier League 2024

198

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட திகதிகளில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் IPG நிறுவனம் அறிவித்துள்ளது. 

தம்புள்ளை  தண்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பங்களாதேஷினைச் சேர்ந்த தமிம் ரஹ்மான் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு காரணமாக கைதுசெய்யப்பட்டிருந்தார். 

>> தம்புள்ளை தண்டர்ஸ் அணியை நீக்கிய இலங்கை கிரிக்கெட்

தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் IPG நிறுவனங்கள் இணைந்து தம்புள்ள தண்டர்ஸ் அணியின் ஒப்பந்தத்தினை உடனடி அமலுக்கு வரும் வகையில் நீக்கியிருந்தது. 

தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் நீக்கப்பட்டதை தொடர்ந்து, LPL தொடர் ஏற்பாடு செய்யப்பட்ட திகதிகளில் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்திருந்தன. எனினும் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி அட்டவணையின்படி LPL தொடர் நடைபெறும் என IPG நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதேநேரம் தம்புள்ள தண்டர்ஸ் அணிக்கு புதிய உரிமையாளர்களை இணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உரிமையாளர்கள் விரைவில் உறுதிசெய்யப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<