LPL தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

Lanka Premier League 2024

271
LPL

இலங்கை கிரிக்கெட்டின் முன்னணி உள்ளூர் தொடரான லங்கன் பிரீமியர் லீக் (LPL) எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து அணிகள் மோதும் இந்த தொடர் ஜூலை முதலாம் திகதி ஆரம்பித்து ஜூலை 21ம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. 

>> கிரிக்கெட் இயக்குனராக மொஹமட் ஹபீஸின் பதவிக்காலம் நிறைவு

தொடரின் முதல் சுற்றில் 20 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து முதலாவது குவாலிபையர், இரண்டாவது குவாலிபையர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தமாக 24 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் 6 வெளிநாட்டு வீரர்கள் உட்பட குறைந்தது 20 வீரர்களை இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், அதிகபட்சமாக 24 வீரர்களை இணைக்க முடியும். இம்முறை தொடருக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும், மைதானங்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை அறிவிக்கவில்லை. 

கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரின் சம்பியனாக வனிந்து ஹஸரங்க தலைமையிலான பி-லவ் கண்டி அணி முடிசூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<