ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான LPL தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்று கோல் மார்வல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டுவைன் பிரிட்டோரியர்ஸின் அபார பந்துவீச்சு, டிம் செய்பர்ட் மற்றும் ஜனித் லியனகேவின் அற்புத துடுப்பாட்டத்தின் உதவியுடன் முதல் அணியாக இறுதிப்போட்டி வாய்ப்பை கோல் மார்வல்ஸ் அணி பெற்றுள்ளது.
>>டில்சான் மதுசங்கவுக்கு அபராதம்!
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோல் மார்வல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஜப்னா கிங்ஸ் அணிக்கு வழங்கியது. அதன்படி களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி ரெய்லி ரூஷோவின் வேகமான ஆரம்பம் மற்றும் குசல் மெண்டிஸின் நிதானமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் சிறப்பாக ஓட்டங்களை குவித்தது.
இதில் ரூஷோவ் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவிஷ்க பெர்னாண்டோ களமிறங்கி அவரும் வேகமாக ஆடினார்.
அவிஷ்க பெர்னாண்டோ 22 பந்துகளில் 52 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 36 பந்துகளில் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் குறைந்த ஓட்ட வேகத்துடன் ஆடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கோல் மார்வல்ஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசிய டுவைன் பிரிட்டோரியர்ஸ் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் அணி ஆரம்பம் முதல் வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டது. இதன்போது அலெக்ஸ் ஹேல்ஸின் 2 பிடியெடுப்புகளை அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தவறவிட்டனர்.
அதுமாத்திரமின்றி களத்தடுப்பில் ஜப்னா கிங்ஸ் அணி மோசமாக செயற்பட, அதனை பயன்படுத்திக்கொண்ட கோல் மார்வல்ஸ் அணி வேகமாக ஓட்டங்களை குவித்தது. தவறவிடப்பட்ட பிடியெடுப்பு வாய்ப்புகளுடன் 21 பந்துகளை எதிர்கொண்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 36 ஓட்டங்களை விளாசி சிறந்த ஆரம்பத்தை தந்தார்.
>>துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை இளம் கிரிக்கெட் அணி
அதனை தொடர்ந்து டிம் செய்பர்ட் மற்றும் ஜனித் லியனகே ஆகியோரின் துடுப்பாட்டம் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எந்தவித வாய்ப்புகளை கொடுக்கவில்லை. இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 62 பந்துகளில் 92 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் செய்பர்ட் 41 பந்துகளில் 62 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 36 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார். இறுதியாக பானுக ராஜபக்ஷ 8 ஓட்டங்களை பெற 18.1 ஓவர்களில் 181 ஓட்டங்களை பெற்று கோல் மார்வல்ஸ் அணி வெற்றியினை பதிவுசெய்தது.
முதலாவது குவாலிபையர் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக கோல் மார்வல்ஸ் அணி மூன்றாவது தடவையாக LPL இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதேநேரம் தோல்வியடைந்துள்ள ஜப்னா கிங்ஸ் அணி, இரண்டாவது குவாலிபையரில் விளையாடவுள்ளது. கண்டி பல்கோன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது குவாலிபையர் ஜப்னா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Dwaine Pretorius | 4 | 4 | 0 | 0 | 100.00 |
Kusal Mendis | b prabath jayasuriya | 46 | 39 | 4 | 1 | 117.95 |
Rilee Rossouw | c Janith Liyanage b Isuru Udana | 40 | 22 | 4 | 3 | 181.82 |
Avishka Fernando | c Bhanuka Rajapaksa b Isuru Udana | 52 | 33 | 4 | 3 | 157.58 |
Charith Asalanka | c Bhanuka Rajapaksa b Dwaine Pretorius | 7 | 6 | 1 | 0 | 116.67 |
Azmatullah Omarzai | not out | 14 | 8 | 0 | 1 | 175.00 |
Dhananjaya de Silva | c Bhanuka Rajapaksa b Dwaine Pretorius | 9 | 5 | 0 | 1 | 180.00 |
Fabian Allen | c Niroshan Dickwella b Dwaine Pretorius | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Wanuja Sahan | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 4 (b 1 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 177/7 (20 Overs, RR: 8.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dwaine Pretorius | 4 | 0 | 23 | 4 | 5.75 | |
Isuru Udana | 4 | 0 | 37 | 2 | 9.25 | |
prabath jayasuriya | 4 | 0 | 38 | 1 | 9.50 | |
Maheesh Theekshana | 4 | 0 | 44 | 0 | 11.00 | |
Sahan Arachchige | 1 | 0 | 11 | 0 | 11.00 | |
Kavindu Nadeeshan | 3 | 0 | 23 | 0 | 7.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alex Hales | st Kusal Mendis b Azmatullah Omarzai | 36 | 21 | 5 | 2 | 171.43 |
Niroshan Dickwella | c Kusal Mendis b Azmatullah Omarzai | 9 | 4 | 2 | 0 | 225.00 |
Tim Seifert | not out | 62 | 41 | 9 | 1 | 151.22 |
Janith Liyanage | c & b Tabraiz Shamsi | 56 | 36 | 5 | 3 | 155.56 |
Bhanuka Rajapaksa | not out | 8 | 7 | 1 | 0 | 114.29 |
Extras | 10 (b 2 , lb 6 , nb 0, w 2, pen 0) |
Total | 181/3 (18.1 Overs, RR: 9.96) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dhananjaya de Silva | 1 | 0 | 11 | 0 | 11.00 | |
Asitha Fernando | 3 | 0 | 33 | 0 | 11.00 | |
Azmatullah Omarzai | 3 | 0 | 33 | 1 | 11.00 | |
Fabian Allen | 4 | 0 | 38 | 1 | 9.50 | |
Wanuja Sahan | 4 | 0 | 31 | 0 | 7.75 | |
Tabraiz Shamsi | 3.1 | 0 | 27 | 1 | 8.71 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<