Home Tamil அசலங்கவின் அபார ஆட்டத்துடன் பிளே-ஓஃப் முன்னேறியது ஜப்னா!

அசலங்கவின் அபார ஆட்டத்துடன் பிளே-ஓஃப் முன்னேறியது ஜப்னா!

Lanka Premier League 2024

140
Kandy Falcons vs Jaffna Kings

LPL தொடரின் 15வது போட்டியில் கண்டி பல்கோன்ஸ் அணியை எதிர்கொண்ட ஜப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்து தங்களுடைய பிளே-ஓஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

பல்லேகலை மற்றும் தம்புள்ளை மைதானங்களை தொடர்ந்து கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்றைய தினம் (13) தொடர் ஆரம்பமாகியது.

எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகிய போதும் கொழும்பின் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பமாகியது. குறிப்பாக இரவு 10.15 இற்கு ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் அணிக்கு தலா 7 ஓவர்கள் ஒதுக்கப்பட்டன.

>> இலங்கை – இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம்!

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கண்டி பல்கோன்ஸ் அணி 7 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களை பெற்றது. கண்டி அணிக்காக மொஹமட் ஹாரிஸ் 13 பந்துகளில் 30 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அற்புதமாக செயற்பட்ட ஜேசன் பெஹரண்ட்ரொப் 2 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. குறிப்பாக அஞ்செலோ மெதிவ்ஸ் குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், தசுன் ஷானக ரெய்லி ரூஷோவின் விக்கெட்டினை வீழ்த்தினார். எனவே 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஜப்னா அணி தடுமாறியது.

எனினும் சரித் அசலங்க 4 சிக்ஸர்கள் அடங்கலாக 9 பந்துகளில் 26 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை இலகுவாக்க, அஷ்மதுல்லாஹ் ஒமர்ஷாய் 6 பந்துகளில் 24 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 7 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

எனவே 5.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து ஜப்னா கிங்ஸ் அணி வெற்றியினை பதிவுசெய்ததுடன், 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் தங்களுடைய பிளே-ஓஃப் வாய்ப்பையும் தக்கவைத்துக்கொண்டது.

போட்டியின் ஓட்ட விபரம்

Result


Kandy Falcons
78/5 (7)

Jaffna Kings
79/6 (5.5)

Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal b Asitha Fernando  21 13 2 1 161.54
Andre Fletcher c Vishwa Fernando  b Jason Behrendorff 0 2 0 0 0.00
Mohammad Haris c Ahan Wickramasinghe b Jason Behrendorff 30 13 2 3 230.77
Dasun Shanaka c Fabian Allen b Jason Behrendorff 2 3 0 0 66.67
Angelo Mathews c Lahiru Samarakoon b Azmatullah Omarzai 11 8 2 0 137.50
Wanindu Hasaranga not out 2 1 0 0 200.00
Ramesh Mendis not out 5 2 1 0 250.00


Extras 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 78/5 (7 Overs, RR: 11.14)
Bowling O M R W Econ
Jason Behrendorff 2 0 10 3 5.00
Asitha Fernando  2 0 19 1 9.50
Azmatullah Omarzai 2 0 20 1 10.00
Rahmanullah Gurbaz 1 0 28 0 28.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Angelo Mathews 5 7 0 0 71.43
Kusal Mendis c Mohammad Haris b Angelo Mathews 0 1 0 0 0.00
Rilee Rossouw c Wanindu Hasaranga b Dasun Shanaka 6 3 0 1 200.00
Avishka Fernando run out (Andre Fletcher) 16 7 0 2 228.57
Charith Asalanka c Mohammad Haris b Wanindu Hasaranga 26 9 0 4 288.89
Lahiru Samarakoon c Mohammad Hasnain b Wanindu Hasaranga 0 2 0 0 0.00
Azmatullah Omarzai not out 24 6 1 3 400.00
Ahan Wickramasinghe not out 0 0 0 0 0.00


Extras 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 79/6 (5.5 Overs, RR: 13.54)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 22 2 11.00
Dasun Shanaka 2 0 26 1 13.00
Wanindu Hasaranga 1 0 18 2 18.00
Andre Fletcher 0.5 0 13 0 26.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<