Home Tamil ஹஸரங்க, துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் பல்கோன்ஸ் அபார வெற்றி!

ஹஸரங்க, துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் பல்கோன்ஸ் அபார வெற்றி!

Lanka Premier League 2024

6
Lanka Premier League 2024

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய கண்டி பல்கோன்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கண்டி பல்கோன்ஸ் அணிக்கு வழங்கியது.

தங்களுடைய கடைசி லீக் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணி தினேஷ் சந்திமாலின் விக்கெட்டினை பறிகொடுத்த போதும், சிறப்பாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியது.

>>இலகு வெற்றியுடன் பிளே ஒப் சுற்றில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி

சந்திமால் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும் மொஹமட் ஹாரிஸ் 13 பந்துகளில் 23 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகப்படுத்தி ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அன்ரே பிளச்சர் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் முதல் பந்தில் பௌண்டரியுடன் வனிந்து ஹஸரங்க இன்னிங்ஸை தொடர்ந்தார்.

இதில் வனிந்து ஹஸரங்க 12 பந்துகளில் 25 ஓட்டங்களையும், அன்ரே பிளச்சர் 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி அடங்கலாக 60 ஓட்டங்களை விளாசி மேலும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தம்புள்ள அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமாக ஆடினர்.

கண்டி பல்கோன்ஸ் அணியின் இன்னிங்ஸ் இறுதிவரை துடுப்பெடுத்தாடிய இவர்கள் தங்களுக்குள் 45 பந்துகளில் 95 ஓட்டங்களை பகிர்ந்தனர். ஆரம்பம் முதல் வேகமாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 23 பந்துகளில் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மறுமுனையில் நிதானமாக ஆரம்பித்து கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசிய அஞ்செலோ மெதிவ்ஸ் 23 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் LPL வரலாற்றில் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் 221 என்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை கண்டி பல்கோன்ஸ் அணி பதிவுசெய்தது. இதற்கு முன்னர் 2021ம் ஆண்டு ஜப்னா கிங்ஸ் அணி 207 ஓட்டங்களை பதிவுசெய்திருந்தது.

கண்டி பல்கோன்ஸ் அணி நிர்ணயித்த பாரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்கு குசல் பெரேரா வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். எனினும் மறுமுனையில் களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் சீறான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

>>சுப்பர் ஓவரில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்திய கோல் மார்வல்ஸ்!

குசல் பெரேரா வேகமாக அரைச்சதம் கடந்து தனியாளாக போராடிய போதும், ஏனைய வீரர்கள் தொடர்ந்தும் ஏமாற்றமளித்தனர். இறுதியில் குசல் பெரேரா வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டு 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றதுடன் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கண்டி பல்கோன்ஸ் அணி தங்களுடைய அனைத்து போட்டிகளிலும் விளையாடி 6 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதுமாத்திரமின்றி தங்களுடைய பிளே-ஓஃப் வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டுள்ளது. இதேவேளை தம்புள்ள அணிக்கு கொழும்பு அணிக்கு எதிராக ஒரு போட்டி எஞ்சியுள்ளது. குறித்த போட்டியில் அதிசிறந்த ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அவ்வாறு சிறந்த ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெறாவிட்டால், பிளே-ஓஃப் வாய்ப்பை தவறவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


Kandy Falcons
222/4 (20)

Dambulla Sixers
168/9 (20)

Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal lbw b Sonal Dinusha  12 14 0 1 85.71
Andre Fletcher c & b Dushan Hemantha 60 34 1 7 176.47
Mohammad Haris c Mohammad Nabi b Dushan Hemantha 24 13 2 2 184.62
Wanindu Hasaranga c Kusal Perera b Dushan Hemantha 25 12 5 0 208.33
Kamindu Mendis not out 51 24 5 2 212.50
Angelo Mathews not out 44 23 0 5 191.30


Extras 6 (b 0 , lb 4 , nb 0, w 2, pen 0)
Total 222/4 (20 Overs, RR: 11.1)
Bowling O M R W Econ
Nuwan Thushara 4 0 36 0 9.00
Dilshan Madushanka 4 0 43 0 10.75
Sonal Dinusha  3 0 39 1 13.00
Dushan Hemantha 4 0 14 3 3.50
Mohammad Nabi 3 0 42 0 14.00
Chamindu Wickramasinghe 2 0 44 0 22.00


Batsmen R B 4s 6s SR
Reeza Hendricks c Chaturanga de Silva b Dasun Shanaka 2 4 0 0 50.00
Kusal Perera c Mohammad Hasnain b Wanindu Hasaranga 74 40 5 5 185.00
Ibrahim Zadran c Chamath Gomez b Mohammad Hasnain 1 3 0 0 33.33
Lahiru Udara c Chaturanga de Silva b Dasun Shanaka 3 5 0 0 60.00
Mark Chapman c & b Wanindu Hasaranga 24 19 4 0 126.32
Mohammad Nabi c Angelo Mathews b Wanindu Hasaranga 3 7 0 0 42.86
Sonal Dinusha  c Wanindu Hasaranga b Dasun Shanaka 17 16 1 0 106.25
Chamindu Wickramasinghe c & b Wanindu Hasaranga 18 13 1 1 138.46
Dushan Hemantha st Dinesh Chandimal b Chaturanga de Silva 17 10 1 2 170.00
Dilshan Madushanka not out 1 1 0 0 100.00
Nuwan Thushara not out 1 2 0 0 50.00


Extras 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 168/9 (20 Overs, RR: 8.4)
Bowling O M R W Econ
Angelo Mathews 1 0 8 0 8.00
Dasun Shanaka 4 0 29 3 7.25
Mohammad Hasnain 4 0 31 1 7.75
Ramesh Mendis 4 0 25 0 6.25
Kamindu Mendis 2 0 29 0 14.50
Wanindu Hasaranga 4 0 35 4 8.75
Chaturanga de Silva 1 0 9 1 9.00