Home Tamil LPL தொடரின் அதிகூடிய வெற்றியிலக்கை எட்டி கண்டி பல்கோன்ஸ் சாதனை

LPL தொடரின் அதிகூடிய வெற்றியிலக்கை எட்டி கண்டி பல்கோன்ஸ் சாதனை

Lanka Premier League 2024

40
Lanka Premier League 2024

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 11வது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயித்த 225 என்ற வெற்றியிலக்கை 18.2 ஓவர்களில் அடைந்து கண்டி பல்கோன்ஸ் அணி அபார வெற்றியை பதிவுசெய்தது.

>>இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளாரக கௌதம் கம்பீர்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஜப்னா கிங்ஸ் அணிக்கு வழங்கியது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க அதிரடியாக ஆடியதுடன், T20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தையும் விளாசினார். இவர் 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 16 பௌண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களை விளாசினார்.

பெதும் நிஸ்ஸங்கவுடன் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்லி ரூஷோவ் வெறும் 18 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஜப்னா கிக்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கண்டி பல்கோன்ஸ் அணிக்காக தசுன் ஷானக 3 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி பல்கோன்ஸ் அணி ஆரம்பம் முதல் வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. இதில் தினேஷ் சந்திமால் முதல் ஓவரில் 20 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்டக்குவிப்பை ஆரம்பித்தார்.

ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய இவர் வெறும் 37 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றார். இதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளை விளாசி சதத்தை தவறவிட்டார். இவரையடுத்து கமிந்து மெண்டிஸ் களத்திலிருந்து மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

>>புற்றுநோய் விழிப்புணர்வுக்காக புதிய ஜேர்சியுடன் தம்புள்ள சிக்ஸர்ஸ்

கமிந்து மெண்டிஸ் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 65 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 13 பந்துகளில் 29 ஓட்டங்களை விளாச 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களை பெற்று கண்டி பல்கோன்ஸ் அணி வெற்றிபெற்றது. பந்துவீச்சில் டெப்ரைஷ் சம்ஷி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை இந்த வெற்றியிலக்கானது LPL தொடரில் அடையப்பட்ட அதிகூடிய வெற்றியிலக்காக பதிவாகியதுடன், இதற்கு முன்னர் இந்த ஆண்டு பல்லேகலையில் நடைபெற்ற தம்புள்ள சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 192 ஓட்டங்களை அடைந்திருந்தமை அதிகூடிய வெற்றியிலக்காக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Result


Kandy Falcons
230/3 (18.2)

Jaffna Kings
224/7 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Kamindu Mendis b Dasun Shanaka 119 59 16 4 201.69
Kusal Mendis lbw b Ramesh Mendis 26 23 2 0 113.04
Rilee Rossouw b Ramesh Mendis 41 18 2 4 227.78
Avishka Fernando b Dushmantha Chameera 16 7 3 0 228.57
Charith Asalanka c Andre Fletcher b Dushmantha Chameera 2 4 0 0 50.00
Azmatullah Omarzai c Kavindu Pathiratne b Dasun Shanaka 1 2 0 0 50.00
Fabian Allen not out 10 5 2 0 200.00
Wanuja Sahan b Dasun Shanaka 0 1 0 0 0.00
Pramod Madushan not out 1 1 0 0 100.00


Extras 8 (b 0 , lb 0 , nb 0, w 8, pen 0)
Total 224/7 (20 Overs, RR: 11.2)
Bowling O M R W Econ
Dasun Shanaka 4 0 40 3 10.00
Shoriful Islam 3 0 47 0 15.67
Dushmantha Chameera 4 0 44 2 11.00
Wanindu Hasaranga 4 0 40 0 10.00
Kamindu Mendis 2 0 25 0 12.50
Ramesh Mendis 3 0 28 2 9.33


Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal b Tabraiz Shamsi 89 37 8 7 240.54
Andre Fletcher b Pramod Madushan 13 6 1 1 216.67
Mohammad Haris lbw b Tabraiz Shamsi 25 18 5 0 138.89
Kamindu Mendis not out 65 36 5 4 180.56
Angelo Mathews not out 29 13 2 2 223.08


Extras 9 (b 0 , lb 4 , nb 0, w 5, pen 0)
Total 230/3 (18.2 Overs, RR: 12.55)
Bowling O M R W Econ
Azmatullah Omarzai 3 0 45 0 15.00
Fabian Allen 2 0 22 0 11.00
Pramod Madushan 3 0 33 1 11.00
Asitha Fernando  3.2 0 35 0 10.94
Wanuja Sahan 2 0 29 0 14.50
Tabraiz Shamsi 4 0 46 2 11.50
Charith Asalanka 1 0 16 0 16.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<