Home Tamil உதான, டிம் சீஃபேர்ட் அதிரடியில் கோல் மார்வல்ஸுக்கு ஹெட்ரிக் வெற்றி

உதான, டிம் சீஃபேர்ட் அதிரடியில் கோல் மார்வல்ஸுக்கு ஹெட்ரிக் வெற்றி

145
Galle Marvels vs Kandy Falcons

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று மாலை (07) நடைபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.  

கண்டி பல்கோன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க மற்றும் அண்ட்ரூ பிளெட்சர் ஆகிய இருவரும் அரைச்சதம் அடித்து அசத்திய போதிலும் அண்ட்ரூ பிளெட்சர், டிம் சீஃபேர்ட் ஆகியோரின் அரைச் சதங்கள் கோல் மார்வல்ஸின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன 

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது. 

அந்த அணி சார்பில் அதிரடியாக விளையாடிய வனிந்து ஹஸரங்க 27 பந்துகளில் அரைச்சதம் கடந்ததுடன் 7 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 65 ஓட்டங்களையும், அண்ட்ரூ பிளெட்சர் 36 பந்துகளில் 4 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.    

கோல் மார்வல்ஸ் அணி தரப்பில் இசுரு உதான 30 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுகளையும், சஹுர் கான் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கோல் மார்வல்ஸ் அணியில் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார் 

அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்த டிம் சீஃபேர்ட் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார் 

அதன்பின் களமிறங்கிய பானுக்க ராஜபக்ஷ 16 ஓட்டங்களுக்கும், ஜனித் லியனகே 11 ஓட்டங்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிம் சீஃபேர்ட் அரைச்சதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 82 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிபெறச் செய்தார் 

இதன்மூலம் கோல் மார்வல்ஸ் அணியானது 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் கண்டி பல்கோன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு எல்பிஎல் தொடரில் தங்களுடைய மூன்றாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது 

பந்துவீச்சில் ஷெரிபுல் இஸ்லாம் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 

இதனிடையே, இப்போட்டியில் வெற்றியீட்டிய கோல் மார்வல்ஸ் அணி, 6 புள்ளிகளை எடுத்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடிக்க, கண்டி பல்கோன்ஸ் அணி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது

Result


Kandy Falcons
175/7 (20)

Galle Marvels
176/4 (17.1)

Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal c Bhanuka Rajapaksa b Dwaine Pretorius 1 3 0 0 33.33
Andre Fletcher lbw b Maheesh Theekshana 50 36 4 2 138.89
Mohammad Haris lbw b Isuru Udana 0 3 0 0 0.00
Kamindu Mendis c Bhanuka Rajapaksa b Isuru Udana 10 10 0 1 100.00
Pavan Rathnayake c Kavindu Nadeeshan b Isuru Udana 0 2 0 0 0.00
Angelo Mathews c & b Zahoor Khan 25 27 2 0 92.59
Wanindu Hasaranga not out 65 32 7 3 203.12
Dasun Shanaka b Zahoor Khan 9 4 0 1 225.00
Dushmantha Chameera not out 5 3 1 0 166.67


Extras 10 (b 0 , lb 3 , nb 0, w 7, pen 0)
Total 175/7 (20 Overs, RR: 8.75)
Bowling O M R W Econ
Dwaine Pretorius 4 0 40 1 10.00
Isuru Udana 4 0 30 3 7.50
Zahoor Khan 4 0 29 2 7.25
Kavindu Nadeeshan 2 0 24 0 12.00
Maheesh Theekshana 4 0 32 1 8.00
Janith Liyanage  2 0 17 0 8.50


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Andre Fletcher b Shoriful Islam 12 6 3 0 200.00
Alex Hales c Pavan Rathnayake b Wanindu Hasaranga 38 19 4 3 200.00
Tim Seifert not out 82 49 11 2 167.35
Bhanuka Rajapaksa b Shoriful Islam 16 13 0 2 123.08
Janith Liyanage  st Dinesh Chandimal b Lakshan Sandakan 11 7 2 0 157.14
Sahan Arachchige not out 9 9 1 0 100.00


Extras 8 (b 0 , lb 1 , nb 0, w 7, pen 0)
Total 176/4 (17.1 Overs, RR: 10.25)
Bowling O M R W Econ
Shoriful Islam 4 0 32 2 8.00
Dasun Shanaka 1.1 0 19 0 17.27
Dushmantha Chameera 4 0 42 0 10.50
Wanindu Hasaranga 4 0 36 1 9.00
Lakshan Sandakan 4 0 46 1 11.50



>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<