LPL தொடரின் 16வது போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை எதிர்த்தாடிய கோல் மார்வல்ஸ் அணி சுப்பர் ஓவரில் திரில் வெற்றியினை பதிவுசெய்தது.
போட்டியின் நாணய சுழற்சயில் வெற்றிபெற்ற தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கோல் மார்வல்ஸ் அணிக்கு வழங்கியது.
>> பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பொண்டிங்
அதன்படி களமிறங்கிய கோல் மார்வல்ஸ் அணி துடுப்பாட்டத்துக்கு சற்று மந்தமான ஆடுகளத்தில் நேர்த்தியான ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொண்டது.
நிரோஷன் டிக்வெல்லவின் விக்கெட் வீழ்த்தப்பட்ட போதும், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் டிம் செய்பர்ட் ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தனர். எனினும் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் கோல் அணி தடுமாறியதுடன் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.
கோல் மார்வல்ஸ் அணி சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ஓட்டங்களையும், டிம் செய்பர்ட் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மொஹமட் நபி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி ஆரம்பத்தில் சீறான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற தொடங்கியது. எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரீஷா ஹென்ரிக்ஸ் மற்றும் அணித்தலைவர் மொஹமட் நபி ஆகியோர் அணிக்காக ஓட்டங்களை குவிக்க தொடங்கினர்.
ரீஷா ஹென்ரிக்ஸ் அரைச்சதம் கடந்து துடுப்பெடுத்தாட, மறுமுனையில் நபி வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவர்கள் இருவரின் பிரகாசிப்பின் காரணமாக கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டன. குறித்த ஓவரை மஹீஷ் தீக்ஷன வீசி ரீஷா ஹென்ரிக்ஸின் விக்கெட்டினை வீழ்த்தியது மாத்திரமின்றி 7 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட மொஹமட் நபி ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
>> அசலங்கவின் அபார ஆட்டத்துடன் பிளே-ஓஃப் முன்னேறியது ஜப்னா!
இந்த நிலையில் போட்டி சுப்பர் ஓவருக்கு செல்ல, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சுப்பர் ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட அலெக்ஸ் ஹேல்ஸின் ஒரு சிக்ஸர் மற்றும் பௌண்டரி கோல் மார்வல்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இந்த வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் கோல் மார்வல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம் தங்களுடைய பிளே-ஓஃப் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது.
போட்டியின் ஓட்ட விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Ibrahim Zadran b Dilshan Madushanka | 7 | 10 | 1 | 0 | 70.00 |
Alex Hales | c Kusal Perera b Mohammad Nabi | 38 | 26 | 5 | 1 | 146.15 |
Tim Seifert | c Nuwan Pradeep b Mohammad Nabi | 23 | 29 | 3 | 0 | 79.31 |
Bhanuka Rajapaksa | lbw b Dushan Hemantha | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Janith Liyanage | b Dushan Hemantha | 13 | 14 | 1 | 0 | 92.86 |
Sahan Arachchige | c Chamindu Wickramasinghe b Nuwan Thushara | 15 | 12 | 1 | 1 | 125.00 |
Dwaine Pretorius | c Reeza Hendricks b Chamindu Wickramasinghe | 16 | 12 | 3 | 0 | 133.33 |
Isuru Udana | c Mark Chapman b Nuwan Pradeep | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Maheesh Theekshana | not out | 8 | 5 | 1 | 0 | 160.00 |
Kavindu Nadeeshan | c Dilshan Madushanka b Nuwan Pradeep | 8 | 3 | 0 | 1 | 266.67 |
prabath jayasuriya | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 3 , lb 8 , nb 0, w 6, pen 0) |
Total | 148/9 (20 Overs, RR: 7.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Thushara | 4 | 0 | 33 | 1 | 8.25 | |
Dilshan Madushanka | 3 | 0 | 20 | 1 | 6.67 | |
Nuwan Pradeep | 4 | 0 | 42 | 2 | 10.50 | |
Dushan Hemantha | 4 | 0 | 19 | 2 | 4.75 | |
Mohammad Nabi | 4 | 0 | 14 | 2 | 3.50 | |
Chamindu Wickramasinghe | 1 | 0 | 9 | 1 | 9.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Reeza Hendricks | c Alex Hales b Maheesh Theekshana | 72 | 57 | 6 | 1 | 126.32 |
Kusal Perera | lbw b Dwaine Pretorius | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ibrahim Zadran | b Maheesh Theekshana | 30 | 18 | 6 | 0 | 166.67 |
Lahiru Udara | b Kavindu Nadeeshan | 12 | 11 | 2 | 0 | 109.09 |
Mark Chapman | b Kavindu Nadeeshan | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Chamindu Wickramasinghe | st Niroshan Dickwella b Maheesh Theekshana | 4 | 6 | 0 | 0 | 66.67 |
Mohammad Nabi | run out (Sahan Arachchige) | 25 | 17 | 1 | 2 | 147.06 |
Dushan Hemantha | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 148/7 (20 Overs, RR: 7.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dwaine Pretorius | 3 | 0 | 27 | 1 | 9.00 | |
Isuru Udana | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
prabath jayasuriya | 4 | 0 | 32 | 0 | 8.00 | |
Maheesh Theekshana | 4 | 0 | 26 | 3 | 6.50 | |
Kavindu Nadeeshan | 4 | 0 | 29 | 1 | 7.25 | |
Sahan Arachchige | 3 | 0 | 13 | 1 | 4.33 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளுக்கு<<