லங்கா பிரீமியர் லீக் 2024 தொடரின் வீரர்கள் ஏலத் திகதி அறிவிப்பு

250

2024ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL)  T20 தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

>>டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரானது இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது. அந்தவகையில் இந்த தொடரின் வீரர்கள் ஏலம் இம்மாதம் 21ஆம் திகதி கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் ஏலம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் தொடருக்கான வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் (Players’ Draft) அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை LPL தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இம்முறை தமது வீரர்கள் குழாத்திற்குள் 24 வீரர்களை அதிகபட்சமாக கொண்டிருக்க முடியும் என்பதோடு, அதில் 6 வெளிநாட்டு வீரர்களை அணிகள் தமது குழாம்களில் கொண்டிருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தமது அணிக்குழாம்களில் குறைந்தது 23 வயதின் கீழ்ப்பட்ட வயது வீரர் ஒருவரினையும் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாக கூறப்பட்டிருக்கின்றது.

LPL 2024 தொடர் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை இந்த ஆண்டு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<