லங்கா பிரீமியர் லீக் (LPL) 2023ஆம் T20 தொடரினை பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
>> இரண்டாவது டெஸ்டுக்கான இலங்கை அணியில் அசித பெர்னாண்டோ
இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரின் (நான்காவது பருவத்திற்கான) போட்டிகள் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவிருக்கின்றன.
இந்த தொடரானது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம் மற்றும் கண்டி பல்லேகல மைதானம் என்பவற்றில் நடைபெறவுள்ள நிலையிலையே இரண்டு மைதானங்களிலும் தொடரினை பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியிருக்கின்றது.
அதன்படி தொடரின் டிக்கெட்டுக்களை இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankacricket.lk மூலம் தற்போது பொது மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேநேரம் டிக்கெட்டுக்களின் கொள்முதல் விலைகள் இலங்கை ரூபா. 150 இலிருந்து ஆரம்பிக்கின்றன.
மறுமுனையில் இந்த ஆண்டுக்கான LPL தொடரில் மூன்று புதிய அணிகளுடன் தொடரின் நடப்புச்சம்பியன் ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா ஆகிய அணிகள் பங்கெடுப்பதோடு இந்த ஆண்டு தொடரில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்கின்ற பல முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
LPL தொடர் டிக்கட் விலை விபரம்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<